என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.

    அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்னை மற்றும் இந்தியாவில் பிற மாநிலங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது.

    இந்நிலையில் படத்தின் மிகப் பெரிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவட்தாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
    • இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் இன்றியமையாத நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் கவுண்டமணி. இதுவரை பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்த நடிகர். அதற்கு பின் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின் வயதின் காரணமாக படங்களில் நடிப்பதை குறித்துக் கொண்டார்

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் இன்று பதவி ஏற்கும் விழா நடைப்பெறுவதை ஒட்டி படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பதவியேற்பு விழா என்ற தலைப்பும் , விரைவில் மக்களையும் காண வருகிறார் என நக்கலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த்
    • சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் விதார்த் நடித்து இருந்தார்

    மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த். பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் இடம், கொலைகாரன், வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

    சில மாதங்களுக்கும் முன் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் விதார்த் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார். படத்தின் பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்துள்ளது. படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    விதார்த் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள அஞ்சாமை திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் விதார்த்துக்கு லாந்தர் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன்.
    • கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் லாக்டவுன் காலகட்டத்தில் நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மிகவும் பரப்பரபாக இருக்கும் காட்சிகள் அமைந்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

    அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.

    இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    பிரேம்ஜிக்கு இன்று  ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
    • டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் உள்ள முக்கியமான பிரமுகர்கள் இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இன்று காலையில் இருந்து மோடி அவர்கள் காந்தி சமாதி, வார் மெமொரியல் , வாஜ்பாய் நினைவு இடம் போன்ற இடங்களிற்கு சென்றார்.

    இந்தநிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை என்றார். அதைத்தொடர்ந்து இம்முறை வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்  தற்பொழுது மோடி பதவியேற்கும் விழாவிற்கு ரஜினி சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
    • சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை  எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஒடிடி தளம் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன்14 முதல் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே.
    • தற்போது ‘கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும் வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் திறந்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

    அப்போது தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அனன்யா பாண்டே தாமதிக்காமல், 'விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்தார்.

    விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் முழுமூச்சாக களமிறங்க உள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்றும் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான ’குறும்பு’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன்.
    • நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார்.

    2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

    அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, ரகுமான், பிரபு, ஆதித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

    அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் பஞ்சா திரைப்படத்தை இயக்கினார், ஆனால் இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார்.

    2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB 2பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தின் டைட்டில் வரும் ஜூன் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
    • சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.




    அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும்.
    • இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது.

    காதல் ,  போலீஸ் கதைகளை எடுப்பதில் வல்லவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும். இவர் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பயங்கர ஹிட்டானது. மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். நடித்திருந்தார்.

    கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். இதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் நீண்ட நாட்களாக வணிக பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது.

    இந்நிலையில், அடுத்ததாக மலையாளப் பக்கம் திரும்பிய கௌதம் மேனன், மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 15- ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மமூட்டி மற்றும் ராஜ் பி செட்டி நடிப்பில் சமீபத்தில் டர்போ திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.

    பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,

    பிரேம்ஜி க்கு நாளை கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில் இன்று அவருக்கு ரிசப்ஷன் நடந்துக் கொண்டு இருக்கிறது. அவரது அண்ணனான இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் ஃபைனலி.... லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். மணப்பெண்ணின் பெயர் இந்து என தெரிய வந்துள்ளது.  தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் விழாவில் சென்னை 28 படக்குழுவினர் , நெருங்கிய நண்பர்கள், நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

     

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×