இன்று மாலை வெளியாகும் ஏ.ஆர் & SK படத்தின் சுவாரசியமான அப்டேட்

அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.
இன்று மாலை வெளியாகும் ஏ.ஆர் & SK படத்தின் சுவாரசியமான அப்டேட்
Published on

அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்னை மற்றும் இந்தியாவில் பிற மாநிலங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது.

இந்நிலையில் படத்தின் மிகப் பெரிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவட்தாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com