விதார்த்தின் அடுத்தடுத்த படங்கள் - வெளியான அப்டேட்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த்சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் விதார்த் நடித்து இருந்தார்
விதார்த்தின் அடுத்தடுத்த படங்கள் - வெளியான அப்டேட்
Published on

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த். பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் இடம், கொலைகாரன், வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கும் முன் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் விதார்த் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார். படத்தின் பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்துள்ளது. படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விதார்த் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள அஞ்சாமை திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் விதார்த்துக்கு லாந்தர் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com