Finallyyyyyy..... லவ் யூ பிரேம்ஜி - வெங்கட் பிரபு வைரல் பதிவு

பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.
Finallyyyyyy..... லவ் யூ பிரேம்ஜி - வெங்கட் பிரபு வைரல் பதிவு
Published on

பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,

பிரேம்ஜி க்கு நாளை கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில் இன்று அவருக்கு ரிசப்ஷன் நடந்துக் கொண்டு இருக்கிறது. அவரது அண்ணனான இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் ஃபைனலி.... லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். மணப்பெண்ணின் பெயர் இந்து என தெரிய வந்துள்ளது.  தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் விழாவில் சென்னை 28 படக்குழுவினர் , நெருங்கிய நண்பர்கள், நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com