`விஜய்யுடன் நடிக்க ஆசை'- அனன்யா பாண்டே விருப்பம்

பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே.தற்போது ‘கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
`விஜய்யுடன் நடிக்க ஆசை'- அனன்யா பாண்டே விருப்பம்
Published on

பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும் வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் திறந்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அப்போது தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அனன்யா பாண்டே தாமதிக்காமல், 'விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்தார்.

விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் முழுமூச்சாக களமிறங்க உள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com