அனுபமாவின் `லாக்டவுன்' டீசர் வெளியானது

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன்.கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
அனுபமாவின் `லாக்டவுன்' டீசர் வெளியானது
Published on

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் லாக்டவுன் காலகட்டத்தில் நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மிகவும் பரப்பரபாக இருக்கும் காட்சிகள் அமைந்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com