மலையாளத்தில் களம் இறங்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் களம் இறங்கும் கவுதம் வாசுதேவ் மேனன்
Published on

காதல் ,  போலீஸ் கதைகளை எடுப்பதில் வல்லவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும். இவர் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பயங்கர ஹிட்டானது. மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். நடித்திருந்தார்.

கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். இதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் நீண்ட நாட்களாக வணிக பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக மலையாளப் பக்கம் திரும்பிய கௌதம் மேனன், மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 15- ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மமூட்டி மற்றும் ராஜ் பி செட்டி நடிப்பில் சமீபத்தில் டர்போ திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com