search icon
என் மலர்tooltip icon
    • அருங்குளம் கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி பெறுவது, சுயதொழில் உருவாக்குவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறது என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மார்த்தாண்டம் பட்டி, மற்றும் அருங்குளம் கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    விளாத்திகுளம் பகுதியை பசுமையாக மாற்றுவது எனது இலக்கு. இளை ஞர்கள் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் நட வேண்டும். நான் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது பார்க்கிறேன் என்னை வரவேற்பதற்காக இளைஞர்கள் கூட்டம் பட்டாசுகளை வெடிக் கின்றனர்.ஆனால் இனிமேல் அது கூடாது. பட்டாசு வாங்கும் செலவுக்கு 30 மரக்கன்றுகள் வாங்கி நடவு செய்யலாம். தற்போது உள்ள தி.மு.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி பெறுவது, சுயதொழில் உருவாக்குவது என இந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.எம் மதியழகன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராம சுப்பு, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் டேவிட்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, கழக பேச்சாளர்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், சரத் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    • பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 303 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, தேசிய உள்ளூர் குழு (எல்.சி) வாயிலாக 1 மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத் திறனாளிக்கு காதொலி கருவி ரூ. 8,500 மதிப்பில் உதவி உபகரணம் மற்றும் தேசிய உள்ளுர் குழு (எல்.எல்.சி.) வாயிலாக ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் வழங்கினார்.

    மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு யூனியன் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
    • யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் 32 கிராம பஞ்சாயத்துக்களை யும், 23 ஒன்றிய கவுன்சிலர்களையும் உள்ளடக்கியது. இந்த யூனியனுக்கான அலுவலகம் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மத்திய பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராள மான பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரார்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

    இதுதவிர மாதந்தோறும் இந்த யூனியன் அலுவல கத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம், கவுன்சிலர்கள் கூட்டம், பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. அவ்வாறு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.

    யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோ ருக்கு பொதுவான கழிப்பறைகள் எதுவும் இல்லை.

    இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்ற னர் என்று சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர்.

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் பற்றி வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம்.

    தென்காசி:

    தமிழகத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட வற்றை ஒழிக்கும் பொருட்டு அரசு அதிரடி நட வடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாரயம் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்டந்தோறும் போலீசார் தரப்பில் இருந்து தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மது, கஞ்சா, கள்ளசாராயம் குறித்து தென்காசி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந் தாலோ தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 93856 78039 என்பதற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    நெல்லை

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    மாவட்டத்தில் மது விலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பவர்கள் பற்றி தகவல் தெரிந்தாலோ, போலி மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, வெளி மாநில மதுபானங்களை வைத்திருந்தாலோ ஹலோ போலீஸ் கைபேசி எண் 9952740740 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்போரின் விபரங்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மாணிக்க வாசகம் டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாபநாச பெருமாள் இறந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாபநாச பெருமாள். இவரது மகன் மாணிக்க வாசகம் (வயது 21). பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பாவூர் சத்திரத்தில் உள்ள டீக்கடை யில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது தந்தை பாபநாச பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மாணிக்கவாசகம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவிரக்தியில் இருந்து வந்த மாணிக்க வாசகம் நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
    • 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வித் தகுதி உடையவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். இம்முகாமில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

    தனியார்வேலைவாய்ப்பு பெற்றவர்களதுமுகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×