தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 19-ந் தேதி நடக்கிறது

முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வித் தகுதி உடையவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - 19-ந் தேதி நடக்கிறது
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். இம்முகாமில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

தனியார்வேலைவாய்ப்பு பெற்றவர்களதுமுகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com