என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க நெல்லை, தென்காசி மாவட்ட போலீஸ் சார்பில் செல்போன் எண்கள் அறிவிப்பு
    X

    தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன்.

    கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க நெல்லை, தென்காசி மாவட்ட போலீஸ் சார்பில் செல்போன் எண்கள் அறிவிப்பு

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் பற்றி வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம்.

    தென்காசி:

    தமிழகத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட வற்றை ஒழிக்கும் பொருட்டு அரசு அதிரடி நட வடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாரயம் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்டந்தோறும் போலீசார் தரப்பில் இருந்து தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மது, கஞ்சா, கள்ளசாராயம் குறித்து தென்காசி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந் தாலோ தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 93856 78039 என்பதற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    நெல்லை

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    மாவட்டத்தில் மது விலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பவர்கள் பற்றி தகவல் தெரிந்தாலோ, போலி மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, வெளி மாநில மதுபானங்களை வைத்திருந்தாலோ ஹலோ போலீஸ் கைபேசி எண் 9952740740 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்போரின் விபரங்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×