என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    இளைஞர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு

    • அருங்குளம் கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி பெறுவது, சுயதொழில் உருவாக்குவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறது என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மார்த்தாண்டம் பட்டி, மற்றும் அருங்குளம் கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    விளாத்திகுளம் பகுதியை பசுமையாக மாற்றுவது எனது இலக்கு. இளை ஞர்கள் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் நட வேண்டும். நான் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது பார்க்கிறேன் என்னை வரவேற்பதற்காக இளைஞர்கள் கூட்டம் பட்டாசுகளை வெடிக் கின்றனர்.ஆனால் இனிமேல் அது கூடாது. பட்டாசு வாங்கும் செலவுக்கு 30 மரக்கன்றுகள் வாங்கி நடவு செய்யலாம். தற்போது உள்ள தி.மு.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி பெறுவது, சுயதொழில் உருவாக்குவது என இந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.எம் மதியழகன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராம சுப்பு, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் டேவிட்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, கழக பேச்சாளர்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், சரத் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×