என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற நடிகை ஸ்ருதி ஹாசன் உதவி செய்துள்ளார்.

    ஆழ்வி என்ற சிறுமி MSMD எனப்படும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நோயைக் குணப்படுத்த சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது.

    சிறுமியின் நிலையை அறிந்த ஸ்ருதி ஹாசன், உடனடியாக சிகிச்சைக்கான முழு நிதி உதவியையும் வழங்கி, சிறுமிக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கவும் உதவியுள்ளார்.

    இதனால் அந்தச் சிறுமிக்குத் தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது அந்தச் சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளார்.

    சிறுமியுடன் அவரது பெற்றோர் ஸ்ருதி ஹாசனை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   

    "எங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது ஸ்ருதி ஹாசன் அவர்கள்தான். அவர் செய்த இந்த உதவியை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது" என்று சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்.

    • அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
    • பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.

    மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.

    கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

    • திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
    • மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது.

    சீனாவில் படம் எடுக்கச் சிறுத்தையின் அருகே வந்த சுற்றுலாப் பயணியின் முகத்தை பனிச் சிறுத்தை கடித்துக் குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோக்டோகாய் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒரு சுற்றுலாப் பயணி, திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.

    காரில் இருந்து கீழே இறங்கி மிக அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

    ஆத்திரமடைந்த பனிச் சிறுத்தை, மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அரிய விலகுகளாக கருதப்படும் பனிச்சிறுத்தைகள் உலகம் முழுவதும் மொத்தமே சுமார் 4,000 முதல் 7,000 வரை தான் எஞ்சியுள்ளன.

    • தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

    சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
    • தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

    வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

    வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமீன் கோரி ஷிம்ஜிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும்.

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.

    இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ஏன்?

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.

    இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.

    அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.

    கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது. 

    • முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
    • 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.

    முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். 

    தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.    

    • தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
    • வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

    வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

    வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனையடுத்துவீடியோ வெளியிட்ட பெண் தலைமறையாகியுள்ளதாகவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகினது.

    இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி ஷிம்ஜிதா கோழிக்கோடு மாநாட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது35). கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ந்தேதி கண்ணூருக்கு ஒரு பஸ்சில் சென்றார்.

    அப்போது அவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் தனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை, அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வாலிபர் தீபக் தற்கொலை செய்து கொண்டார். இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடும் விவாதத்தை உருவாக்கியது.

    தீபக்கின் சாவுக்கு காரணமான இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகன் மீது அபாண்டமாப பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டினார்.

    அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் சமூகவலை தளத்தில் வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.

    தனது வீடியோ பதிவு மற்றும் தன்னுடைய செயல்பாட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒரு வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பஸ்சில் பயணிப்பது போன்று இருக்கறது.

    மற்றொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவர், தனது உடலில் நெஞ்சு மற்றும் கைகள் உள்ளிட்ட இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு வந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.

    ஆண்களின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை, அந்த பஸ்களில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் அட்டை பெட்டியால் உடலை மறைத்து பஸ்சில் ஆண்கள் பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
    • யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.

    தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.

    அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.

    அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

    • ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
    • 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

    வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

    வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் எந்த தவறும் செய்யாத ஒரு நபர் தன மீதான தவறான குற்றச்சாட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய நெட்டிசன்கள் அப்பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்நிலையில், வீடியோ வெளியிட்ட பெண் தலைமறையாகியுள்ளதாகவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×