பாஜக எம்.பியின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பெல்ட்?.. மக்களவையில் மறைக்க முயன்ற வீடியோ வைரல்

அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.
பாஜக எம்.பியின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பெல்ட்?.. மக்களவையில் மறைக்க முயன்ற வீடியோ வைரல்
Published on

மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.

கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com