என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் வெளியிட்ட வீடியோவால் பறிபோன உயிர்..! கேரளாவில் அட்டைப்பெட்டி கவசத்துடன் பேருந்தில் பயணம் செய்யும் ஆண்கள்
    X

    பெண் வெளியிட்ட வீடியோவால் பறிபோன உயிர்..! கேரளாவில் அட்டைப்பெட்டி கவசத்துடன் பேருந்தில் பயணம் செய்யும் ஆண்கள்

    • வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது35). கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ந்தேதி கண்ணூருக்கு ஒரு பஸ்சில் சென்றார்.

    அப்போது அவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் தனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை, அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வாலிபர் தீபக் தற்கொலை செய்து கொண்டார். இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடும் விவாதத்தை உருவாக்கியது.

    தீபக்கின் சாவுக்கு காரணமான இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகன் மீது அபாண்டமாப பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டினார்.

    அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் சமூகவலை தளத்தில் வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.

    தனது வீடியோ பதிவு மற்றும் தன்னுடைய செயல்பாட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒரு வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பஸ்சில் பயணிப்பது போன்று இருக்கறது.

    மற்றொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவர், தனது உடலில் நெஞ்சு மற்றும் கைகள் உள்ளிட்ட இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு வந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.

    ஆண்களின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை, அந்த பஸ்களில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் அட்டை பெட்டியால் உடலை மறைத்து பஸ்சில் ஆண்கள் பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×