search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி பலி"

    • முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்துள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முனிராஜ் (34). இவர் தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடி பயிர்செய்திருந்தார். கடலை தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் இரவு அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மஞ்சுநாத் (35) என்பவரை அழைத்து கொண்டு முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

    தோட்டத்தில் சிறுது நேரம் இருந்துவிட்டு மின்வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் மற்றொரு தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மஞ்சுநாத்தை அருகில் உள்ள குடிசையில் தூங்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நேற்று சுமார் 7 மணி அளவில் மஞ்சுநாத் குடிசையிலிருந்து எழுந்த வந்து பார்த்தபோது மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மஞ்சுநாத் உடனே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த முனிராஜிக்கு அம்சா (30) என்ற மனைவியும், கோமதி (11) என்ற மகளும் ஹேமந்த் (8) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி-பெட்டிகடைக்காரர் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் ராம சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 23). இவர் மேலக்கோட்டை அவுசிங்போர்டு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அங்குள்ள தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் சென்றார். செங்கப்படை விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி காவேரி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையின் எதிரே உள்ள ஓட்டலுக்க சாப்பிட சென்றார். பின்னர் கடைக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு வாலிபர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கூடலிங்கத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். பின்னர் உறவினர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கூடலிங்கத்தின் மகன் மணிகண்டன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் விவசாயி மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவர் தனது மனைவியுடன் சொக்கத்தேவன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மீனாட்சிபுர த்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மாமனார் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் விவசாயி.
    • புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை ஏரிப்பா ளையத்தை சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது அங்குசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, எதிரில் வந்த ஆட்டோ விவசாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயம டைந்த விவசாயி ராமதாசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விவசாயி ராமதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அடுத்த நகரந்தலை சேர்ந்தவர் தொப்பளான் (வயது 23). விவசாயி.

    இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் நகரந்தலில் இருந்து சேத்துப்பட்டுக்கு தனது பைக்கில் சென்றார். கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த பைக் இவர் ஓட்டி வந்த பைக் மீது திடீரென மோதியது. இதில் தொப்பளான் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தொப்பளான் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ராமலிங்கம் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொப்பளான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற பைக்கை தேடி வருகின்றனர்.

    • நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது பரிதாபம்
    • தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த கரிபூரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). விவசாயி.

    இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார்.

    அப்போது அருகே இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.

    இதில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் மூழ்கி இறந்தார். வெகு நேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால் அவரைத் தேடி குடும்பத்தினர் இன்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது மணிகண்டன் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சேத்துப்பட்டு போலீசா ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விசாரணை

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மணிகண்டன் உடலில் கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது சம்பந்தமாக சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 70). விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார். அப்போது பேரணி கூட்ரோடு சாலையை கடக்க முயன்ற போது, சென்னை யில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனசேகரன், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேேய பலி யானார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது.
    • சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவமழை பருவம் தப்பி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    பின்னர் மாலை யாரும் எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. அடுத்த சில வினாடிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

    இதில் பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதேபோன்று மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்புகளை சரி செய்தனர். 

    • கணவன் மனைவி இருவரும் யானையிடமிருந்து உயிர் பிழைக்க அலறி அடித்தபடி தப்பி ஓடினர்.
    • கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெத்தகாணி மண்டலம், முடி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் மார்கொண்டைய்யா (வயது52). விவசாயி.

    இவரது மனைவி அருணம்மா. மார்கொண்டைய்யாக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

    நேற்று காலை கணவன் மனைவி இருவரும் நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்தனர். பின்னர் பணிகள் முடிந்து மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை ஒன்று இருவரையும் வழிமறித்து துரத்தியது. கணவன் மனைவி இருவரும் யானையிடமிருந்து உயிர் பிழைக்க அலறி அடித்தபடி தப்பி ஓடினர்.

    ஆக்ரோஷத்துடன் இருந்த யானை இருவரையும் விடாமல் துரத்திச் சென்றது. அப்போது மார்கொண்டைய்யா கால் தவறி கீழே விழுந்தார்.

    ஆவேசமாக இருந்த யானை அவரை காலால் மிதித்து கொன்றது. பின்னர் துதிக்கையால் தூக்கி வீசியது. இதனைக் கண்ட அருணம்மா பதறி அடித்தபடி கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.

    கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது மார்கொண்டைய்யா இறந்து கிடந்தார். அவரை மிதித்து கொன்ற யானை வனப்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மார்கொண்டைய்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெத்தகாணி மண்டலத்தில் இதுவரை 3 பேரை யானைகள் மிதித்து கொன்று உள்ளன. வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையின நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்துள்ள கெட்ரபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது52).

    விவசாயியான இவர் பனந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.

    இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாண்டியன் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • கிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் ராஜபாண்டியன் (40)விவசாயி. இவர் நேற்று இரவுதாழம்பட்டி லிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி -கும்பகோ ணம் சாலை பணிக்கும் குப்பம் அருகே வந்து கொண்டி ருந்தபோதுபண்ருட்டியிலிருந்துசாத்திப்பட்டு சென்றுகொண்டிருந்த

    மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜபாண்டியன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் தெரிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா, கரிக்கலாம்பாடி ஊராட்சியை அடுத்த ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (54) விவசாயிகள்.

    இவர்கள் இருவரும் இன்று (2-ந்தேதி) அதிகாலை 4 மணி அளவில், தங்களது நிலங்களில் விளைந்த மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட பொருட்களை, மாதப்பூண்டியை சார்ந்த பிரசாந்த் (26) என்பவருக்கு சொந்தமான மினி வேனில் ஏற்றிக்கொண்டு, கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    கருங்காலிகுப்பம் அருகே வரும்போது எதிர்பாராத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் குமார், பழனி மற்றும் டிரைவர் பிரசாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் பிரசாந்த் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். பழனிக்கு தலை, கை மற்றும் காலில் படுகாயம் அடைந்து வாகனத்தில் சிக்கி கொண்டார்.

    கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினர் 2-மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பழனியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×