பண்ருட்டி அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி

ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் விவசாயி. புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பண்ருட்டி அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை ஏரிப்பா ளையத்தை சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது அங்குசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, எதிரில் வந்த ஆட்டோ விவசாயி மீது மோதியது.

இதில் பலத்த காயம டைந்த விவசாயி ராமதாசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விவசாயி ராமதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com