விக்கிரவாண்டி அருகே கார் மோதி விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி

வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விக்கிரவாண்டி அருகே கார் மோதி விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 70). விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார். அப்போது பேரணி கூட்ரோடு சாலையை கடக்க முயன்ற போது, சென்னை யில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனசேகரன், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேேய பலி யானார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com