ஆண்டிபட்டி அருகே பைக் விபத்தில் விவசாயி பலி

பைக் விவசாயி மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவர் தனது மனைவியுடன் சொக்கத்தேவன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மீனாட்சிபுர த்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மாமனார் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com