search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி தற்கொலை"

    • போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.

    மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
    • இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்மல். இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள உளிபெண்டா பகுதியில் தாகி வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் அக்ஸா (வயது 17). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்மல் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள டி. புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளியப்பன் என்பவர் குடிபழக்கத்தை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகள் மோனிஷா தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 51) விவசாயி.

    இவருக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.

    பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    தீராத வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனவேதனையில் இருந்த பரசுராமன் கடந்த 20-ஆம் தேதி விஷம் குடித்து உள்ளார்.

    உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
    • மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58).விவசாயியான இ வருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.

    ஆனால் அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.மேலும் சின்னசாமியின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதில் மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி. நாராயணசாமி (42) என்பவர் குடிக்க மனைவி பணம் த ரவில்லை என்பதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார்.
    • போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. விவசாயி. இவர் உடல் நல பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி கொடுமுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்போட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
    • விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.

    இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள வெட்டையன் கிணறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (47). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    சுந்தர்ராஜனும் அவரது தாயார் சரோஜாமணியும் வசித்து வந்தனர். சுந்தர்ராஜன் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதுகுறித்து அவர் விரக்தியில் தனது தங்கை சின்னம்மாளிடம் மனமுடைந்து பேசி வந்ததாக தெரிகிறது. சின்னம்மாளும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அப்போது வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.

    வாய்க்கால் கரையில் விஷ மாத்திரைகளும் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தர்ராஜனை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரவநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இது குறித்து சுப்பிரமணியின் மகன் நாகராஜ் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற–னர். 

    • வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பழனிசாமி (64). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியே சென்று விட்டார். இதனால் பழனிசாமி வேதனையடைந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×