என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
- பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
- இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 51) விவசாயி.
இவருக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.
பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
தீராத வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனவேதனையில் இருந்த பரசுராமன் கடந்த 20-ஆம் தேதி விஷம் குடித்து உள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story






