search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private hostel"

    • ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம்.

    சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

    அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் தங்கி இருந்தனர்.
    • இந்நிலையில் ஸ்ரீகுமார் (வயது 70) என்பவருக்கு அதிகாலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் தங்கி இருந்தனர். இந்நிலையில் அதில் ஒருவரான ஸ்ரீகுமார் (வயது 70) என்பவருக்கு அதிகாலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

    உடனே அவருடன் இருந்த வியாபாரிகள் அவரை மீட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்த னர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்காசி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். அதில் உயிரிழந்த ஸ்ரீகுமார் உள்பட 3 பேரும் சேர்ந்து பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பல்லாரி கொள்முதல் செய்வதற்காக வந்தவர்கள் என்றும், அப்போது திடீரென ஸ்ரீகுமாருக்கு மூச்சுசு திணறல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர்.
    • திருட்டு குறித்து மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    நெல்லை:

    பாளை மகாராஜநகரில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை அங்குள்ள 8 மாணவர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவர்கள் இது குறித்து ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார்.
    • போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. விவசாயி. இவர் உடல் நல பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி கொடுமுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்போட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    சத்துவாச்சாரி தனியார் விடுதியில் தங்கியிருந்த வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் அரசப்பன் மகள் தமிழரசி (வயது 30). ஊசூரில் உள்ள வங்கியில் கிளர்க் வேலை செய்து வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரது ஊரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகேஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகும் தமிழரசி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்துவாச்சாரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×