search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"

    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலை மற்றும் பொது இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்புகின்றனர்.

    மேலும் அசுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ் கலந்து கொண்டு, பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியை ஜாக்குலின் மார்டின், உதவி பேராசியைகள் கோமதி, சசிரேகா மற்றும் மாணவிகள் செய்து இருந்தனர்.

    • சிறுவளூர் அரசு பள்ளியில் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது

    அரியலூர்,

    அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துறையின் மாவட்ட தலைமை கண்காணிப்பு அலுவலக உதவி ஆய்வாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். காவல் மஞ்சித், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் சரண்யா கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    ஆண்டுதோறும் அக்டோ பர் 30-ந்தேதி முதல் நவம் பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்க லம் ஆலம்பட்டியில் அமைந் துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல் லூரி தாளாளர் எம்.எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற் றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப் புள்ள மாணவ, மாணவிகள் லஞ்சம் வாங்கவும் மாட் டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற உறுதி மொழி ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆம்புரோஸ், ஜெயராஜ் மற்றும் சூர்யகலா ஆகியோர் கலந்துகொண்டு லஞ்சம் பெறுவதால் அர சின் திட்டங்கள் எவ்வா றெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும், குறிப் பிட்ட சில லஞ்ச வழக்கு விபரங்களை எடுத்துரைத்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினர்.

    முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடய அறிவி யல் துறை தலைவர் சீனிவா சன் தலைமையில் மாணவ-மாணவிகள் அஸ்வின், கார்த்திகேயன், ஜெனிடா, ஷோபனா, ராபியா, தாருன் னிஸா, ஸ்ரீ ஜெயலட்சுமி ஆகியோரும் அரங்க ஏற்பா டுகளை மனித வள மேலாளர் முகமதுபாசிலும் செய்திருந்தனர்.

    • தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரூபா தலைமையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் காவடியாட்டம், தேவராட்டம், கரகாட்டம் ஆடியபடி விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதைப்பந்து தூவுதல் திட்ட தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமார் முன்னிலை வகித் தார். கலெக்டர் ஜெயசீலன் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு பசுமையாக்கள் திட்டம் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து விதைப்பந்து தூவுதல் எனும் சிறப்பு திட்டம் மூலம் தமிழ்நாடு பசுமையாக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை செயல் படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.

    மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்த வும், சுற்றுச்சூழலை பாது காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைப் பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப் பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரை யோரங்கள் மற்றும் புறம் போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தா லும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு மற்றவர்க ளுக்கு எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இராஜகிரியில் அமைந்துள்ள முக்கிய வீதிகளின் வழியாக புகையிலை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி, பேரணியாக சென்று, போதைகளின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் சில்லரைப்புரவு ஊராட்சியில் நடைபெற்றது.
    • மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சில்லரைப்புரவு ஊராட்சி மன்ற தலைவர் நா.குமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிய, எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் பரிசோதனையை செய்து கொண்டனர்.

    முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் முத்துலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பார்வதி, கணேசன், தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன்,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ் மற்றும் மாரிமுத்து, அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செண்பக ராஜன் நன்றி கூறினார்.

    • “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை "பிங்க் அக்டோபர்" என்ற பெயரில் மார்பக புற்று நோய் குறித்து பொது மக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் 9 ஆயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் இறப்பதை ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவதை முற்றிலும் அகற்றும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக் டர் கலைச்செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் காரைப் பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 38.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியலில் 41,067 இளம் வாக்காளர்கள் புதிதாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். 21 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிக்கும் தகுதியை பெற்று உள்ள 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1.13 லட்சம் பேர் இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களோ குறைவாக உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கக்கூடிய இளைஞர்கள் பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என தெரிய வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் பெயரை பதிவு செய்ய ஆர்வம் காட்டாமல் இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தகுதி உள்ளவர்கள் கட்டாயம் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. கடமையை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விடுபட்ட வாக்காளர்களை கண்டுபிடிப்பது சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சவாலாக உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம் 6, படிவம் 6ஏ, படிவம் 7 அல்லது படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை எந்த நேரத்திலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் படிவங்கள் கிடைக்கும் என்று மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா தெரிவித்தார்.

    • நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்று மார்பக புற்றுநோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    • காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    • விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.
    • ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம்.

    திருப்பூர்,அக்.24-

    ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசு சார்பில், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம், குறைவான பிரிமியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் சுரக்ஷா காப்பீடு திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையுள்ள, வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம்.

    விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.ஆண்டு பிரிமியமாக 20 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.பிரதமர் ஜீவன்ஜோதி காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள், 2லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறலாம். ஆண்டு பிரிமியமாக 436 ரூபாய் செலுத்தி இணையலாம். காப்பீடுதாரர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் பெறலாம்.

    வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம். அவரது வங்கி கணக்கில் இருந்து பிரிமியம் பிடித்தம் செய்யப்படும். ஏழை மக்கள், வங்கி கணக்கு இருந்தால் இத்திட்டங்களில் பயன்பெறலாம்.கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு செய்ய அறுவுறுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, 31ந் தேதி வரை, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    ×