என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி

    • காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×