மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறுவளூர் அரசு பள்ளியில் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது
மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

அரியலூர்,

அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துறையின் மாவட்ட தலைமை கண்காணிப்பு அலுவலக உதவி ஆய்வாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். காவல் மஞ்சித், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் சரண்யா கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com