search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் சேதுபதி"

      இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள "போர்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

      இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

      நடிகர் விக்ரம் நடித்த 'டேவிட்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிஜாய் நம்பியார், பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

      டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். 2 நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக இப்படம் உருவாகியுள்ளது.

      • ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
      • இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

      ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.


      இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


      இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "படத்தின் டிரைலரை பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக 'சிங்கப்பூர் சலூன்' என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.


      கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குனர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்." என்றார்.

      • விஜய் சேதுபதியின் 50-வது படம் 'மகாராஜா'.
      • இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

      தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


      பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


      மகாராஜா போஸ்டர்

      இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக 'மகாராஜா' படக்குழு இப்படத்தின் இரண்டாது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கையில் கத்தியுடன் ரத்த காயங்களுடன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • இயக்குனர் கோகுல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
      • இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்.

      ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.


      இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரொடக்ஷன் நம்பர் எண் 10' என்று அழைக்கப்படுகிறது. இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்ஷன் படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும்.


      தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' .
      • இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

      விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார். 'அந்தாதூன்' படம் தற்போது தமிழில் 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது. 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.


      பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 'மெர்ரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


      இந்நிலையில், இந்த புரோமோஷன் போது பத்திரிகையாளர்கள் இந்தி குறித்து கேள்வி கேட்டனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, "இந்த கேள்வியை இதற்கு முன்பு அமீர்கான் வரும்போது கேட்டீர்கள். இந்தி படிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். இன்றும் இந்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கேள்வியை தவறாக கேட்கிறீர்கள். இந்த கேள்வி இங்கு தேவையில்லாதது" என்று கூறினார்.

      • தன்மீதான விசாரணைக்கு தடைக்கோரி விஜய் சேதுபதி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
      • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

      நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. தன்மீதான விசாரணைக்கு தடைக்கோரி விஜய் சேதுபதி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

      இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது என்று கேட்டனர்.

      பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விஜய்சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தனர். கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

      • படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்.
      • படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்.

      ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வசீகரமான அனுபவத்தை வழங்கும்.

      மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து நடிகை கத்ரினா கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

       


      இதுகுறித்து அவர் பேசியதாவது, "இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சாருடன் பணியாற்றியது எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும் சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்."

      "அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

      • மெரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
      • இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது.

      கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி  இருக்கிறது.

      ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்துள்ளனர்.

       


      இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்து இருக்கிறார்கள்.

      இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம், கொண்டாட்டம் மிகுந்த கிறிஸ்மசை மையமாகக் கொண்டிருப்பதால் 'மெரி கிறிஸ்மஸ்' என்று படத்திற்கு பெயரிட்டிருக்கிறது.



      • வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
      • இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

      இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்' (Train). இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


      விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

      தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


      இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

      • இயக்குனர் மிஷ்கின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
      • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

      தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.


      இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின்' திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


      மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


      இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
      • பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டது.

      7 C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது.

      இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

       

      இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

      விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

      இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் இதன் பின்னணி வேலைகள் துவங்க இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

      • பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
      • இவர் பல மொழிகளில் நடிக்கிறார்.

      நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.


      ஃபீனிக்ஸ் வீழான் போஸ்டர்

      இவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

      விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் சூர்யா நடித்திருந்ததாக கூறப்படுகிறது.

      ×