search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிந்தி"

      இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள "போர்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

      இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

      நடிகர் விக்ரம் நடித்த 'டேவிட்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிஜாய் நம்பியார், பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

      டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். 2 நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக இப்படம் உருவாகியுள்ளது.

      • ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.
      • தாய்மொழி எமது பிறப்புரிமை கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

      சென்னை

      கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

      இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அந்த டுவீட் மேற்கோள்காட்டி புதிய பதிவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.

      75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

      ×