search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு"

    • படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மீன்களின் இனப்பெருக்கு பருவகாலத்தில் விசைப் படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட் டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்க மங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல் லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தி யாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளி ரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப் படகுகள் கரை திரும்பி மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக் காலத்தில் விசைப் படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்கலம் நீங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் விசைப்படகுகளை தீவிரமாக பழுது பார்த்து வருகின்றனர்.

    • அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதி நவீன தொலைத்தொடர்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது காசிமேடு மீனவர்களின் 750 படகுகளில் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும். இது ஜிசாட்-6 செயற்கை கோள் வழியாக இயங்கும்.

    இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பட்டன் உள்ளது. இதை மீனவர்கள் அவசர காலத்தில் அழுத்தினால் அதில் இருந்து தகவல் மற்றும் படகு இருக்கக்கூடிய இடத்தை தகவலாக மீன்வளத்துறை, படகின் உரிமையாளர், மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவலாக சென்று அடையும். இதே போல் கடலில் மற்றொரு படகு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அதையும் மற்றொரு படகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டறிக்கூடிய தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆழ் கடலில் உள்ள மீனவர்களின் படகுகளை சுலபமாக கண்டறிந்து மீட்க முடியும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இந்த கருவி இயங்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கருவியை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் விசைப் படகுகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி உதவி வழங்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.
    • நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தின் முதுகெலும்பாக மீன்பிடி தொழில் உள்ளது. இந்த மாவட்ட புதிய கலெக்டராக சமீபத்தில் ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்றார்.

    மீன்பிடி தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் கலெக்டருக்கு இருந்து வந்தது.

    இதனையடுத்து மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்து கொள்ள மீனவர்களுடன் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்.

    அதன்படி, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

    நடுக்கடலில் வைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் மீனவர்களை போன்று கடலில் வலைவீசி மீன் பிடித்தார்.

    தொடர்ந்து, அவர் வீசிய வலையில் சிக்கிய மீன்களின் ரகங்கள் என்ன என்பது குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

    அவ்வப்போது விசைப்படகையும் ஓட்டி மகிழ்ந்தார். மேலும், நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகை மாவட்ட கலெக்டர் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 18-ந்தேதி வரை சூறாவளி காற்று வீசக் கூடும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை எதிரொலி
    • மீன்பிடி தடை காலம் முடிவடைந்த முதல் நாள் அன்றே தடை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதற்கிடையில் வருகிற 18-ந்தேதி வரை 3 நாட்கள் கடலில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன் பேரில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் இன்று முதல் 3 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்று சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா விசைப்படகுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராக நின்ற விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையில் மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நேற்று முதலே சின்னமுட்டம் துறை முகத்தில் வந்து குவிந்திருந்த மீன்வியாபாரிகள் ஏமாற் றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் மீன்பிடி தடைகாலம் முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விசைப்படகு மீனவர்களும் சூறாவளி காற்றினால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து முதல் நாள் அன்றே சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் தடைக்காலம் முடிந்த முதல் நாள் அன்றே களைஇழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர்.

    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இன்று (1-ந்தேதி) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.

    விசைப்படகுகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர். கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் இன்று காலை மீன் பிடிக்க சென்றன. கரை திரும்பிய கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள், வேளா மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது.
    • இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தை ஒரு பிரிவினர் நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தை கைப்பற்ற மற்றொரு தரப்பினர் முயன்றனர்.

    இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு காசிமேடு மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் குவிந்தனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் இருதயம், முகமது நாசர் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சங்கத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த விவகாரத்தை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • ராமேசுவரத்தில் 300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
    • வருகிற 15-ந்தேதி தடைக்காலம் தொடங்குகிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. கிறிஸ்த வர்களின் தவக்கா லத்தை யொட்டி ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசு வரம் மீனவர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தினமும் குறைவான அளவிலே மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். ராமேசு வரத்தில் இருந்து 300 விசைப்படகுகள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றன.

    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதி க்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கு கிறது. ஏப்ரல் 15-ந்தேதி ஜூன் 15-ந் ேததி வரை மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போது ஆழ்கடல் சென்று மீன் பி டிக்க விசைப் படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் 16-ந்தேதிக்கு பிறகே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அதுவரை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடித்து வருவார்கள். அந்த நேரத்திலும் மீனவர்க ளுக்கு வருவாய் இருக்காது.

    இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருவதாலும், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதாலும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது குறைந்துவிட்டது என்றார்.

    • 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
    • கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.

    இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.

    கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது.

    வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
    • குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டு மரங்க ளும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதி யில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கண வாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியி லேயே கரை திரும்பின.அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று பலத்த காற்று காரணமாக பைபர் கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் குறைவான மீன்களே கிடைத்தன.இதனால் இன்று குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    ×