search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் 4 பேர் கைது"

    சென்னையில் இன்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான்.

    புறநகர் மக்களை சென்னை நகரோடு இணைக்கும் பாலமாக இருக்கும் மின்சார ரெயில்கள் சென்னை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம்.

    அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயக்கப்படும் சென்னை மின்சார ரெயில்களை நம்பிதான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் போதுமான அளவுக்கு ரெயில் சேவைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் கொடூரம் நடக்கிறது.

    நேற்று இரவு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்துக்கும் 3-வது பிளாட்பாரத்துக்கும் இடை யில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். கூட்ட நெரிசலில் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி பயணம் செய்த அவர்களுக்கு சிமெண்ட் தடுப்பு சுவர் எமனாக மாறியது.

    சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்தனர். இந்த நிலையில் இன்று காலை அதே இடத்தில், அதே சுவரில் மோதி 4 பேர் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரெயில் சேவை தொடங்கி நடந்தபடி இருந்தது. காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்தனர். இந்த பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. இதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.

    மின்சார ரெயிலை எதிர்பார்த்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து கொண்டே நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரெயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால் பயணிகள் அனைவரும் கிடைத்த ரெயில்களில் முண்டியடித்தபடி ஏறி சென்றனர்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும் விரைவு ரெயில் கடற்கரையில் வழக்கமாக காலை 7.05 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலை மின்வயர் அறுந்து விழுந்து தடை ஏற்பட்டதால் அந்த ரெயில் 7.40 மணிக்கு தான் புறப்பட்டது.

    தாமதம் மற்றும் அதிக விரைவு ரெயில் சேவை இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் அந்த ரெயிலில் ஏறினார்கள். இதனால் அந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடற்கரைக்கு பிறகு கோட்டை, பார்க், எழும்பூர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய 9 ரெயில் நிலையங்களிலும் ஏராளமானவர்கள் அந்த விரைவு ரெயிலில் ஏறினார்கள். இதனால் நிறைய பயணிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டி வாசலிலும் தொங்கி கொண்டே பயணம் செய்ய நேரிட்டது.

    காலை 8.25 மணிக்கு அந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் வந்தது. தாமதம் காரணமாக அந்த ரெயில் சற்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த ரெயில் வழக்கமான பிளாட்பாரத்துக்குள் செல்லாமல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் 4-வது பிளாட்பாரத்திற்கு திருப்பி விடப்பட்டு இருந்தது. இதுதான் இன்று காலை நடந்த பரிதாப விபத்துக்கு காரணமாகி விட்டது.

    4-வது பிளாட்பாரத்திற்கும், 3-வது பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த சிமெண்ட் தடுப்பு சுவரை ரெயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை. ரெயில் பிளாட்பாரத்தில் நுழைந்ததும் தொங்கிக் கொண்டு இருந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சிமெண்ட் தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டது.

    இதனால் அந்த பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

    சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்தார். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    9 பயணிகள் கீழே விழுந்த தகவல் அறிந்ததும் டிரைவர் ரெயிலை அங்கேயே நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கினார்கள். ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.



    ரெயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் வேனுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது நவீன்குமார் என்ற பயணி இறந்தார்.

    முதலில் பலியானவர்கள் விவரம் தெரியாமல் இருந்தது. பிறகு அவர்களது உடமைகளை ஆய்வு செய்து அவர்கள் யார் என்று கண்டுபிடித்தனர்.

    பலியானவர்களில் ஒருவர் சிவக்குமார். இவர் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரில் படித்து வந்தார். இன்று காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.

    மற்றொருவர் பரத் என்று தெரிய வந்துள்ளது. இவர் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மற்றவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காயம் அடைந்த 4 பேரில் 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பயணிக்கு 2 கால்களும் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவருக்கு கை நசுங்கி உள்ளது.

    அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை ரெயில்வே போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    4 பேரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பீஜேந்திரசிங், அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங்சாய் ஆகியோர் பரங்கிமலைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்து நடந்த சிமெண்ட் தடுப்பு சுவர் பகுதியையும் பார்வையிட்டனர்.

    நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 6 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident 
    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது.

    தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடினர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வாணிஸ்ரீ, மைதிலி சரவணன், ரவீனா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மாயமான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம எனவும் தெரிவித்துள்ளார். #Mettur #Cauvery
    திருவண்ணாமலையில் ரஷிய பெண் பலாத்கார வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷிய பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
    திருவண்ணாமலை:

    ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்து செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 14-ந் தேதி விடுதி அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. 16-ந் தேதி காலை சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அந்த அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். பின்னர் அன்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரஷிய பெண் தங்கி இருந்த அபார்ட்மெண்டை திருவண்ணாமலை அருகில் உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 31) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து அனுமதியில்லாமல் விடுதி நடத்தி வந்துள்ளார். அதே அபார்ட்மெண்டில் 5-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் பாரதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தில் போலீசாருக்கு பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (35), அவர்களின் கார் டிரைவர் வெங்கடேசன் (30) மற்றும் பாரதியின் நண்பர் மணிகண்டன் (37) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீசார் ரஷிய பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் சுயநினைவின்றியும், அதிர்ச்சியிலும் இருந்ததால் எந்தவித தகவலையும் பெற முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

    கடந்த 17-ந் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அந்த ரஷிய பெண்ணை பார்வையிட்டனர். ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து சென்றனர். ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்த பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சுயநினைவுக்கு திரும்பிய ரஷிய பெண்ணிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

    மேலும் நேற்று மாலை ரஷிய பெண்ணிடம் ஆரணி கிளை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு நடந்த சம்பவம் குறித்து ரகசிய வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு 5.10 மணிக்கு வந்தார். அவர் சுமார் 2½ மணி நேரத்திற்கு மேல் அந்த பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.

    இதையடுத்து இரவு 8 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரஷிய இளம்பெண் சுற்றுலாவுக்காக கடந்த 3.6.2018 அன்று இந்தியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் தங்கிருந்த அறைக்கு அதிக வாடகை வசூலித்ததால், மாற்று இடம் தேடியுள்ளார்.

    இதையடுத்து அவர் விசாரித்து பாரதியின் அபார்ட்மெண்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி காலை 7.50 மணியளவில் மயக்க நிலையில் இருந்து அந்த பெண்ணை பாரதி மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பாரதி - வெங்கடேசன்

    இதுகுறித்து நான் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அபார்ட்மெண்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மேலும் சந்தேகத்தின் பேரில் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தோம். இந்த நிலையில் ரஷிய பெண் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் பாரதி என்பவர் தன்னை 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். #PakistanBlast #BlastNearMMARally
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின்போது பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. பட்டியலில் உள்ள தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானியும் ஒருவர்.

    இந்நிலையில், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அக்ரம் கான் துர்ரானி இன்று காலை பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பன்னு நகரில் அவரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வாகன அணி வகுப்பிற்கு மிக அருகாமையில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் துர்ரானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    முன்னாள் பிரதமர் அப்பாசி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துர்ரானி, வரும் தேர்தலில் முத்தாஹிதா இ அமால் கட்சி சார்பில் பன்னு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் போட்டியிடுகிறார். #PakistanBlast #BlastNearMMARally 
    தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். #Thaicaverescue #FourboysinThaicaverescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


    இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.  அதேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இந்நிலையில்,  வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 4 மாணவர்கள் மீட்கப்பட்டு, மீட்பு குழுவினரின் நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளதாக இன்று மாலை முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மேலும் இரு மாணவர்கள் குகையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவசரமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

    இவர்களை தொடர்ந்து குகைக்குள் உள்ள மேலும் 7 பேரும் விரைவில் வெளியே வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Thaicaverescue #FourboysinThaicaverescue
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 28 வயது காமுகனால் சீரழிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 4 வயது குழந்தை மேல்சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டம், பரஸ்மனியா பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை தனது பெற்றோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்தது.

    அப்போது அங்கு வந்த ஒரு காமுகன் அந்த குழந்தையை தூக்கிச் சென்று, சற்று மறைவான இடத்தில் வெறித்தனமாக சீரழித்துவிட்டு, அவள் இறந்துப் போனதாக நினைத்து புதரில் வீசிச் சென்றுள்ளான்.

    குழந்தையை காணாமல் தவித்தபடி தேடிய பெற்றோர் மிக மோசமான நிலையில் ரத்த காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இன்று அந்த குழந்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையில், பச்சிளம் தளிரை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கிய பாதகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சொத்து தகராறு காரணமாக தம்பி வீட்டுக்கு அண்ணன் வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டவி பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திர தேவ்கடே (30). இவரது தாய் கஸ்தூரிபாய் (60), அவரது சகோதரர் ராகுலுடன் வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவருக்கும் இடையே நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.  

    இந்நிலையில், தனக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராமச்சந்திரன் நேற்று இரவு ராகுல் வீட்டின் மீது கெரசினை ஊற்றி தீ வைத்தார். வீட்டின் உள்ளே படுத்திருந்த ராகுல், அவரது மனைவி சுஷ்மா மற்றும் அவரது மகன் ஆர்யன் (3) மற்றும் அவரது தாய் கஸ்தூரிபாய் ஆகியோர் தீயில் சிக்கினர்.

    தனது உடலில் தீப்பற்றிய போதிலும், வீட்டை விட்டு வெளியே வந்த ராகுல் அங்கு நின்றிருந்த ராமச்சந்திரனை கட்டிப்பிடித்தார்.

    தீயில் சிக்கி அலறிய அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராகுல், அவரது மனைவி, மகன் மற்றும் ராகுலின் தாய் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். ராகுல் வீட்டுக்கு தீ வைத்த ராமச்சந்திரன் படுகாயத்துடன் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சொத்து தகராறு காரணமாக சகோதரர் வீட்டுக்கு வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBSC #GroupIV
    சென்னை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான முடிவுகளை படிப்படியாக விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி, தேர்வாணையத்தின் புது முயற்சியாக, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிலுவையில் உள்ள போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடும் உத்தேச கால அட்டவணையை தேர்வாணையம் அதன் இணையதளத்தில் கடந்த 4-ந்தேதி வெளியிட்டது.

    மேற்படி தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை, விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வாணையம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 14-ந்தேதி 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று அரசு தேர்வாணையத்தின் உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் 85 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட்டது. அதன் முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

    மேலும் சில தேர்வு முடிவுகள் வெளியிடும் மாதம் உத்தேசமாக வெளியிடப்பட்டு உள்ளன.  #TNBSC #GroupIV #tamilnews
    சிவகாசியில் கோழிக்கறி சாப்பிட்டு 4 பேர் இறந்த விவகாரத்தில் வள்ளி சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசியில் மது குடித்த 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக வி‌ஷம் கலந்த கோழிக்கறியை சாப்பிட்டதால் அவர்கள் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் இறந்தவர்களில் ஒருவரான முருகனின் சகோதரி வள்ளியை கைது செய்தனர். மேலும் அச்சக அதிபர் செல்வம் என்பவரும் போலீசார் பிடியில் சிக்கி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் உண்மை வெளிவந்தது எப்படி? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதா வது:-

    மது குடித்த 4 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினோம். அப்போது கண்மாய் கரையில் மது அருந்தியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் நண்பர் அந்தோணிராஜ் என்பவரிடம் விசாரித்தபோது, மது அருந்திய அனைவரும் அய்யப்பனின் அண்ணன் முருகன் வீட்டில் கோழிக்கறி சாப்பிட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகன் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் அங்கு வாந்தி எடுத்து இறந்து கிடந்தார்.

    அந்த வாந்தியை பரிசோதனை செய்தபோது கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கோழிக்கறியை சமைத்த வள்ளியை பிடித்து விசாரணை நடத்தினோம். அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பேசினார். இருப்பினும் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் கோழிக்கறியில் குருணை மருந்தை கலந்தது அவர்தான் என தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரிடம் வள்ளி தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

    எனது தந்தை தர்மராஜிக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இந்திராணியின் மகள்தான் நான். எனது சகோதரன் முருகன். 2-வது மனைவி வாணியின் மகன் அய்யப்பன்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த நான் சிவகாசியில் அச்சகத்தில் வேலை பார்த்தேன். அச்சக அதிபர் செல்வம் எனக்கு பல வழிகளில் பாதுகாப்பாக இருந்தார். இது எனது தம்பி முருகனுக்கு பிடிக்கவில்லை.

    செல்வத்துடன் பேசுவதை நிறுத்தும்படி கூறினான். ஆனால் நான் கேட்கவில்லை. இந்த நிலையில் திடீரென முருகன் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். தம்பியே இந்த செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    எனவே அவனுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான் என நாடகமாட திட்டமிட்டேன். ஆனால் முருகனுக்கு கொடுத்த கோழிக்கறியை மற்றொரு தம்பி அய்யப்பன், அவனது நண்பர்கள் சாப்பிட்டதால் உயிர்ப்பலி அதிகமாகி விட்டது.

    இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    கோழிக்கறி சாப்பிட்ட அய்யப்பனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவனது நண்பன் அந்தோணிராஜிடம் சகோதரன் முருகன் வீட்டில் சாப்பிட்டதை தெரிவித்ததன் மூலமே இந்த வழக்கில் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறினார்.

    வள்ளி கொடுத்த தகவலின்பேரில் அச்சக அதிபர் செல்வம் போலீசில் பிடிபட்டுள்ளார். அவருக்கும், வள்ளிக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்தும், முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதானா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளாவில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இளம்பெண்ணும், வாலிபர்களும் செல்போனில் வீடியோ சாட்டிங் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இதன் மூலம் அந்த பெண்ணிடம் அதிக பணம் இருப்பதை 4 வாலிபர்களும் தெரிந்து கொண்டனர். அவர்கள் பெண்ணிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதற்காக அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து ஆபாச படம் தயாரித்தனர். அந்த படத்தை இன்னொரு செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பெண்ணிடம் செல்போனில் வேறு நபர் பேசுவதுபோல் பேசி, பணம் கேட்டனர். பணம் தர மறுத்தால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர். பயந்து போன அந்த பெண், அவர்களுக்கு பல்வேறு தவணையாக ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தார். மேலும் அவரது நகைகளையும் வழங்கினார்.

    பெண்ணிடம் இருந்து வாங்கிய பணம் மூலம் 4 வாலிபர்களும் தனியாக கார் வாங்கினர். அதில், கோவா, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர்.

    தமிழில் வெளியான திருட்டு பயலே படம் போல நடந்த இச்சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் 4 வாலிபர்களையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக வல்லாப்பாடு போலீஸ் அதிகாரி சைஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    4 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டபோது, அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வருமாறு அந்த பெண் அழைப்பதுபோல் போலீசார் அழைத்தனர்.

    அதனை நம்பி வந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொத்தகுளத்தைச் சேர்ந்த ஆதித்யன், வல்லப்பாட்டைச் சேர்ந்த அஜய், தலைக்குளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆதில் ஆகியோர் ஆவார். அவர்களிடம் இதுபோல வேறு யாரிடமாவது பண மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புஷ்கரன் கூறும்போது, பெண்கள் செல்போனில் தவறான நபர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக செல்போனை கையாள வேண்டும் என்று கூறினார். #Tamilnews
    “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித் கூறியுள்ளார். #H4Visa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்-1’ பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார்.

    அதை நீக்கிவிட தற்போதைய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் மனு அளித்தனர்.

    இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்” என்று குறிப்பிட்டார்.

    எனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் தற்காலிகமாக நிம்மதி அடையலாம்.  #H4Visa  #tamilnews
    தஞ்சாவூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Accident
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் புறநகர் வழிச்சாலையில் இன்று அதிகாலை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அங்கு வந்த கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். #Accident
    ×