search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணிகள்"

    • கள்ளக்குறிச்சியில் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதயில்கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏமப்பேர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, குளத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி டவும், குளக்கரையின் மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையும், பூங்கா அமைப்பதற்கான பணிகளையும் விரை ந்து மே ற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் ஏமப்பேர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டார். அப்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி குடிநீர் வழங்கிடவும், நீரினை குளோரினேஷன் செய்து, தூய்மையாக நீரை பொதுமக்களுக்கு விநியோகித்திட அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பா ட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.148.58 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியினையும், சீத்தா ராமன் பார்க் அருகில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்புராயலு, நகராட்சிப் பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.

    இதில் கொங்காடை ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம் முதல் மாதேஸ்வரன் வீடு வரையிலும், தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் பட்டய பாளையம் வரை உள்ள சாலை, ஒன்னகரை முதல் முத்தூர் வன எல்லை வரையிலும் தாமரைக்கரை பெஜில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணியர் நிழற்குடை, கடையிரட்டி பகுதியில் ஆழ்துளைக்கிணறு, தட்ட கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மேலும் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் மரியதாஸ் செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பர்கூர் சிவக்குமார் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்
    • ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவல கத்திற்கென ஒப்படைக்கப் பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ .3.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்து அதனை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர் நியமிக்க ஊராட்சித் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வளர்ச்சி திட்டப்பணிகள்

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் சுந்தரவனம் திட்டங்கினாவிளையில் வடிகால் அமைப்பு பணியி னையும், ரூ.9 லட்சம் மதிப்பில் முள்ளூர்து றையில் உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினையும், ரூ.1 லட்சம் மதிப்பில் தேங்காப் பட்டினம் ஜும்மா பள்ளிவாசலில் முடிவ டைந்த பேவர் பிளாக் அமைக்கப்பட்டிருந்தையும், ரூ.7 லட்சம் மதிப்பில் தேங்காப்பட்டினம் கே.எஸ்.எம். முதல் ஜும்மா பள்ளிவாசல் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ெரயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி நடைபெறும் ஆண்டியமேடு பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் மரக்கன்றுகள் நட்டார்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலம் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அதிகாரிகளிடம் கடந்தா ண்டு மேம்பால பணி ஆய்வு செய்த போது ஒப்பந்ததாரர் 6 மாதத்தில் முடிப்பதாக கூறினாரே? ஏன் அந்த பணிகளை நிறைவு செய்யவில்லை? என்று கலெக்டர் கேட்டதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளித்தனர்.

    அப்போது குறுக்கிட்ட பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கலெக்டரிடம் மேம்பால பணியில் ெரயில் நிலையம் அருகே நகரி 4 வழிசாலை பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆலங்கொட்டாரம், ரிஷபம் உள்பட அப்பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறுவதற்கான மற்றும் இறங்குவதற்கான சாலை சரியான வழிமுறையாக இல்லை. இதனால் வாகனங்கள் வெகுதூரம் சென்று திரும்பி வரக்கூடிய நிலை உள்ளது. இதுபோக விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இதற்கு மாற்றாக நகரி ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு நேரடியாக வாகனங்கள் செல்ல புதிய பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம், கலெக்டர் பேரூராட்சி சேர்மன் கோரிக்கையைநிறைவேற்றி கொடுக்கும்படி உத்தரவிட்டார் இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பிரசன்னா, உதவி இயக்குனர் (திட்டம்), சாருமதி பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் சேதுராமன். உதவி செயற்பொறியாளர் சுரேஷ். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேரூராட்சி செயலாளர் சுதர்சனன், சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், சிவராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ், கொத்தாளம் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர், அரியபெருமானூர் மற்றும் அகரக்கோட்டாலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிர மிப்பு செய்யாமல் தடுக்கும் வகையில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.தொடர்ந்து அரிய பெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சங்கன் பாண்ட் அமைக்கும் பணி, பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

    அப்போது பணியா ளர்கள் பணிக்கு வராமல் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய கூடாது எனவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிதள பொறுப்பாளர் மற்றும் அதிகாரிகளிம் அறிவுறுத்தினார். இதேபோல் அகர க்கோட்டாலம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டுள்ள தடுப்பணையும், ரூ.9.97 லட்சம் மதிப்பிலான பொதுக்கிணறு வெட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள்கலந்து கொண்டனர்.

    • மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில்ஒன்றிய குழுபெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புனிதா ராமஜெயம் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டபணிகள், பொது நிதி, 15-வது மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நொய்யல் பகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    நொய்யல்:

    நொய்யல் பகுதியில் உள்ள கோம்புபாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் சாலைமேம்பாடு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் 64 பயனாளிகளுக்கு பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் வகையில், ரூ.32 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக் கான ஆணைகளை வழங்கினார். வீரசோளிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்தார். இதில் காகிதஆலை முன்னாள் பேரூராட்சி தலைவர் கமலக்கண்ணன், காகிதபுரம் பேரூர்செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், புன்செய்புகளூர் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், கூட்டுறவு வங்கித்தலைவர்கள் முனுசாமி, ரங்கநாதன், முன்னாள் ஊராட்சித்தலைவர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
    ×