search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ெரயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி நடைபெறும் ஆண்டியமேடு பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் மரக்கன்றுகள் நட்டார்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலம் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அதிகாரிகளிடம் கடந்தா ண்டு மேம்பால பணி ஆய்வு செய்த போது ஒப்பந்ததாரர் 6 மாதத்தில் முடிப்பதாக கூறினாரே? ஏன் அந்த பணிகளை நிறைவு செய்யவில்லை? என்று கலெக்டர் கேட்டதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளித்தனர்.

    அப்போது குறுக்கிட்ட பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கலெக்டரிடம் மேம்பால பணியில் ெரயில் நிலையம் அருகே நகரி 4 வழிசாலை பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆலங்கொட்டாரம், ரிஷபம் உள்பட அப்பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறுவதற்கான மற்றும் இறங்குவதற்கான சாலை சரியான வழிமுறையாக இல்லை. இதனால் வாகனங்கள் வெகுதூரம் சென்று திரும்பி வரக்கூடிய நிலை உள்ளது. இதுபோக விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இதற்கு மாற்றாக நகரி ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு நேரடியாக வாகனங்கள் செல்ல புதிய பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம், கலெக்டர் பேரூராட்சி சேர்மன் கோரிக்கையைநிறைவேற்றி கொடுக்கும்படி உத்தரவிட்டார் இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பிரசன்னா, உதவி இயக்குனர் (திட்டம்), சாருமதி பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் சேதுராமன். உதவி செயற்பொறியாளர் சுரேஷ். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேரூராட்சி செயலாளர் சுதர்சனன், சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், சிவராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ், கொத்தாளம் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×