search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணிகள்"

    • சத்துணவு சமையலறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
    • மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    முத்தூர் பேரூராட்சி காந்திநகர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாக கட்டிடம், சக்கரபாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 90 ஆயிரத்தில் அங்கன்வாடி கட்டிடம், மு.வேலாயுதம்பா ளையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.11 லட்சத்தில் இருப்பறையுடன் கூடிய சத்துணவு சமையலறை கட்டிடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    செங்கோடம்பா ளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்து 60 ஆயிரத்தில் நொய்யல் ஆறு வரை தார்சாலை பலப்படுத்தும் பணி, புதுப்பாளையம், புளியங்காட்டுத்தோட்டம் வீதி, நகப்பாளையம், பெருமாள்புதூர் கிழக்கு குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணியும் புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், தார்ச்சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் தொடங்கி வைத்தார். மேலும் மோளக்கவுண்டன்புதூர் கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை, சின்னமுத்தூர் பிரிவில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 8 லட்சத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் முத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணை தலைவர் மு.க.அப்பு, மாவட்ட துணை செயலாளர்

    ராசி கே.ஆர்.முத்துக்கு மார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) மீனா கவுரி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மன்னார்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஜெயினத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருவதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட மன்னை நகர் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலந்துரையாடினார்.

    மேலும் தாமரைக்குளத்தில் உட்புற சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதையும், ருக்மணி குளத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், மேலநாகை பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தாசில்தார் ஜீவானந்தம், மன்னார்குடி நகராட்சி தலைவர்.மன்னை சோழராஜன், நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர்.குணசேகரன், ஆகியோர் இருந்தனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சி கொல்லகொட்டாய் மலை கிரா மத்தில் மண்வரப்பு அமைத்தல், கம்புகுடி கிராமத்தில் தனிந பர் திறந்துவெளி கிணறு, அங்கன்வாடி மையம், கொல்ல கொட்டாய்கிராமத்தில் பசுமை வீடு, அரசுமரத்துக்கொல்லை உண்டு உறைவிடப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு, பெரும்பள்ளி கிராமத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், புங்கம் பட்டு நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதூர் நாடு ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ.82 லட்சத்து 68 ஆயிரத்தில் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண் டியன் ஆய்வு செய்தார்.

    அப்போது நிலுவையில் உள்ள அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    புதூர் நாடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு செய்து, நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட பழங் குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர். மணவாளன், உதவி பொறியாளர்கள் சுதாகர், முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • புகளூர் நகராட்சி பகுதிகளில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது.
    • அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 15-வது நிதி குழு மானியத்தில் கடைவீதி பேருந்து நிறுத்தம் வரை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 மற்றும் அம்ருத்ரன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் செம்படாபாளையம் பகுதியில் புதிதாக பூங்கா அமைத்தல் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் ராம்நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக பூங்கா அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு புகளூர் நகரக் கழகச்செயலாளரும், நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கனிராஜ், துணைத் தலைவர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • பணியாளர்களுக்கு தேவராஜி எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களுடன் தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தேவராஜி கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட பணிகள் கள ஆய்வுக்கும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலக பணியாளர்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    தமிழக முதல்வர் அறிவிக்கும் அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

    • கன்னியாகுமரிக்கு நாளை வருகை
    • நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தையும் பார்வையிடுகிறார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி கவு ன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், நவீன் குமார், சேகர்,அனிலா சுகுமாறன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாக ர்கோவில் மாநகராட்சி வார்டுக்கு உட்ப ட்ட பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி பொது மக்களிடமிருந்து குறைகள் கேட்க ப்படுகிறது.

    அதன் அடிப்படையில் நாளை 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடக்கிறது. இந்த பகுதி சபா கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை வார்டு பகுதிகளில் நடத்தப்படும். மேலும் நாளைமறுநாள் 2-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் பெருவிளையில் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார் .

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கே.என்.நேரு நாளை 1-ந் தேதி தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்குரூ.30 கோடி நிதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மிகவும் பழுதான சாலைகள் முதல் கட்டமாக சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் தெரிவித்தார்.

    • திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ்.ஆர். ஜெக தீஸ் அடிக்கல் நாட்டினார்.
    • நவ்வலடியில் அங்கன் வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ்.ஆர். ஜெக தீஸ் அடிக்கல் நாட்டினார்.

    மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் நவ்வலடி கீழத்தெருவில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் தார் சாலை, கோடா விளையில் ரூ.9.20 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் மரக்காட்டுவிளையில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வல்லான் விளை வடக்கு முதல் தெருவில் ரூ. 5 லட்சம் மதிப்பிலும், வடக்கு தெரு 2- வது தெருவில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டிலும், ராமன்குடி நிலா நகரில் ரூ. 8.12 லட்சம் மதிப்பிலும், பாலாஜி நகரில் ரூ. 6.24 லட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.நவ்வலடியில் ரூ. 12.61 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவண குமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு,ஜெஸி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சி யார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளர் சரோஜா, சரவணகுமார்,பொன் இசக்கி, லயன்ஸ் முன்னாள் கவர்னர் சுயம்பு ராஜன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர் கண்ணன்,திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், குமார்,காமில், சுடலைமனி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி நகர் பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்டத்தின் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டும், நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் ஆய்வு செய்து, உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    தினமும் காலை , மாலை, இரவு ஆகிய நேரங்களில் எவ்விதமான உணவு வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார். விடுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தாப்பேட்டை சாலையில் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நூலக கட்டிடப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் 3. 50 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அருகில் அமைய உள்ள நகர் மன்ற அலுவலக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், நகர் மன்ற உறுப்பினர் பாலகுமார், கோட்டாட்சியர் மாதவன், வட்டாட்சியர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் மனோகரன், திமுக நகரச் செயலாளர் சிவக்குமார் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் மலையப்பன் மேற்பார்வையாளர் சையது மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வடமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள வீட்டினையும், செங்க மலப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சத்துண வுக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.23.57 லட்சம் மதிப்பில் நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், சித்துராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதுக்குளம் கண்மாய் பணிகளையும், க.க.ச. மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டா ட்சியர் லோகனாதன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், ராம மூர்த்தி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

    • ஒன்றிய குழு தலைவர் பார்வையிட்டார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கடம்பநல்லூரில் மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பாலம் அமைக்கும் பணியினை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி

    ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யத்திலிருந்து, கடம்ப நல்லூர் கிராமத்தில் சிறுபாலம் ரூ.9 லட்சம் மற்றும் பின்னாவரம் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார்.

    இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரலட்சுமி, அஷோக்குமார், விநாயகம், ஒப்பந்ததாரர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது.
    • 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் வட்டாரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிந்த பணிகளை திறந்து வைத்தும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வருகிற 5ந் தேதி சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரால் காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 137 மாணவர்களுக்கும் 178 மாணவிகளுக்கும் என மொத்தம் 315 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,97,551 மதிப்பீட்டிலும், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 245 மாணவிகளுக்கு ரூ.12,23,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.பின்னர் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் முதல் பொங்கலூர் சாலையில் தொடங்கி குன்னாங்கல்பாளையம் ஆதிதிராவிடர் காலணி வரை ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், கணபதிபாளையம் ஊராட்சி எஸ்.ஆர்.சி நகர் பகுதியில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் தானியக்கிடங்கு கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்தும், அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.92.62 லட்சம் மதிப்பில் 13 வளர்ச்சி புதிய பணிகளை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.1 கோடியே 46லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் முடிந்த பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

    இந்தநிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முருகேஷன், பல்லடம் கூட்டுறவு கள அலுவலர் சுரேஷ்குமார்,ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் தேன்மொழி, பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் தொகுதியில் ரூ. 1.60 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி, ஆலம்பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம், கிழவனேரி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம் என ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரளி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டிடம் மற்றும் பாலம் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×