என் மலர்
உள்ளூர் செய்திகள்

முசிறி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
- காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் முசிறி நகர் பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்டத்தின் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டும், நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் ஆய்வு செய்து, உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தினமும் காலை , மாலை, இரவு ஆகிய நேரங்களில் எவ்விதமான உணவு வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார். விடுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தாப்பேட்டை சாலையில் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நூலக கட்டிடப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் 3. 50 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அருகில் அமைய உள்ள நகர் மன்ற அலுவலக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், நகர் மன்ற உறுப்பினர் பாலகுமார், கோட்டாட்சியர் மாதவன், வட்டாட்சியர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் மனோகரன், திமுக நகரச் செயலாளர் சிவக்குமார் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் மலையப்பன் மேற்பார்வையாளர் சையது மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.