search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வடமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள வீட்டினையும், செங்க மலப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சத்துண வுக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.23.57 லட்சம் மதிப்பில் நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், சித்துராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதுக்குளம் கண்மாய் பணிகளையும், க.க.ச. மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டா ட்சியர் லோகனாதன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், ராம மூர்த்தி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×