search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    செங்கோடம்பாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தார் சாலைகளை பலப்படுத்தும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.

    முத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • சத்துணவு சமையலறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
    • மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    முத்தூர் பேரூராட்சி காந்திநகர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாக கட்டிடம், சக்கரபாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 90 ஆயிரத்தில் அங்கன்வாடி கட்டிடம், மு.வேலாயுதம்பா ளையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.11 லட்சத்தில் இருப்பறையுடன் கூடிய சத்துணவு சமையலறை கட்டிடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    செங்கோடம்பா ளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்து 60 ஆயிரத்தில் நொய்யல் ஆறு வரை தார்சாலை பலப்படுத்தும் பணி, புதுப்பாளையம், புளியங்காட்டுத்தோட்டம் வீதி, நகப்பாளையம், பெருமாள்புதூர் கிழக்கு குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணியும் புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், தார்ச்சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் தொடங்கி வைத்தார். மேலும் மோளக்கவுண்டன்புதூர் கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை, சின்னமுத்தூர் பிரிவில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 8 லட்சத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் முத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணை தலைவர் மு.க.அப்பு, மாவட்ட துணை செயலாளர்

    ராசி கே.ஆர்.முத்துக்கு மார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) மீனா கவுரி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×