search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முன்சிறை ஒன்றிய பகுதியில் ரூ.4.15 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் அரவிந்த் ஆய்வு
    X

    குமரி மாவட்டம் முன்சிறை ஒன்றிய பகுதியில் ரூ.4.15 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் அரவிந்த் ஆய்வு

    • ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்
    • ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவல கத்திற்கென ஒப்படைக்கப் பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ .3.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்து அதனை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர் நியமிக்க ஊராட்சித் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வளர்ச்சி திட்டப்பணிகள்

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் சுந்தரவனம் திட்டங்கினாவிளையில் வடிகால் அமைப்பு பணியி னையும், ரூ.9 லட்சம் மதிப்பில் முள்ளூர்து றையில் உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினையும், ரூ.1 லட்சம் மதிப்பில் தேங்காப் பட்டினம் ஜும்மா பள்ளிவாசலில் முடிவ டைந்த பேவர் பிளாக் அமைக்கப்பட்டிருந்தையும், ரூ.7 லட்சம் மதிப்பில் தேங்காப்பட்டினம் கே.எஸ்.எம். முதல் ஜும்மா பள்ளிவாசல் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×