search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய காட்சி. 

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×