search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்"

    • பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார்.
    • அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 27). வக்கீல். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த அனுதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அனுதர்ஷினி தனது பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷயுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அக்ஷய் விரக்தியடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (31). மாநகராட்சி ஒப்பந்த பணியாளர். இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 வழக்குகள் இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் ரத்தினபுரியில் பிரியாணி ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானமில்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் மணிகண்டன் விரக்தி அடைந்த அவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி வகுப்பை நிறைவேற்று மனுக்கள் சம்பந்தமாக என்ற தலைப்பில் நாகர்கோவில் முதலாவது சார்பு நீதிபதி முருகன் அனைத்து வக்கீல்க ளும் தெளிவு பெறும் வண்ணம் விளக்கினார்.

    இதில் மூத்த வக்கீல்கள் ரெத்தினசுவாமி, தனிஸ்லாஸ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
    • சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

    கன்னியாகுமரி:

    இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி க்கூடம், மருத்துவமனை என்று பொது மக்கள் வந்து செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அகற்ற கோரி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார், இரணியல் பஞ்சாயத்து செயல் அலுவலர் லெட்சுமி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மகள் நிஷாவுடன் (21) திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த சட்டப்படிப்பு படித்த ரகுமான்கான் (25) என்பவர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    இதையடுத்து ரகுமான்கானை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரகுமான்கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.

    இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • வெளிநாட்டில் இருந்து பண உதவிகள் வருகிறதா? என கேட்டு வக்கீலிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது.
    • மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    அதில், "நாட்டை துண்டாடும் வகையில் சில தேச விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் நலனுக்காக செய ணல்படுத்தப்படும் 'அணு உலை', 'அக்னி பாத்' உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில், வீண் காலதாமதம் ஏற்படுகிறது.

    நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த தேச விரோத சக்திகளின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதாக தெரிகிறது. இவர்கள் உடனுக்குடன் பலரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளது.

    பொதுமக்களை மூளை சலவை செய்து நாட்டிற்கு எதிராக போராட தூண்டுகின்றனர். இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடி கணக்கில் சட்ட விரோதமாக பணம் வருகிறது. தேசத்தை துண்டாடும் நோக்கத்தில் இத்தகைய அமைப்புகள் வெளி நாட்டு சக்திகளுடன் கை கோர்த்து செயல் பட்டு வருகின்றனர்.

    எனவே இத்தகைய தேச விரோத சக்திகளின் பின்னணியை ஆராய்ந்து, அவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து வரும் பண பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் ஆஜராகும்படி வக்கீல் முத்துக்குமாருக்கு சமன் அனுப்பினர். அதன்படி அவர் சி.பி.சி.ஐ. டி சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வினோதினி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வக்கீல் முத்துக்குமார் புகார் மனு தொடர்பான சகல ஆதாரங்களையும் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளிடம் விசா ரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    ×