search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம்
    X

    மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம்

    • வெளிநாட்டில் இருந்து பண உதவிகள் வருகிறதா? என கேட்டு வக்கீலிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது.
    • மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    அதில், "நாட்டை துண்டாடும் வகையில் சில தேச விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் நலனுக்காக செய ணல்படுத்தப்படும் 'அணு உலை', 'அக்னி பாத்' உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில், வீண் காலதாமதம் ஏற்படுகிறது.

    நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த தேச விரோத சக்திகளின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதாக தெரிகிறது. இவர்கள் உடனுக்குடன் பலரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளது.

    பொதுமக்களை மூளை சலவை செய்து நாட்டிற்கு எதிராக போராட தூண்டுகின்றனர். இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடி கணக்கில் சட்ட விரோதமாக பணம் வருகிறது. தேசத்தை துண்டாடும் நோக்கத்தில் இத்தகைய அமைப்புகள் வெளி நாட்டு சக்திகளுடன் கை கோர்த்து செயல் பட்டு வருகின்றனர்.

    எனவே இத்தகைய தேச விரோத சக்திகளின் பின்னணியை ஆராய்ந்து, அவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து வரும் பண பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் ஆஜராகும்படி வக்கீல் முத்துக்குமாருக்கு சமன் அனுப்பினர். அதன்படி அவர் சி.பி.சி.ஐ. டி சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வினோதினி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வக்கீல் முத்துக்குமார் புகார் மனு தொடர்பான சகல ஆதாரங்களையும் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளிடம் விசா ரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×