search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி"

    • குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
    • இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அஞ்சு கிராமம் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், தேங்காப்பட்ட ணம் பகுதியில் சந்தேகத்தி ற்கிடமாக கார் வந்தது. அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டி னர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றது.

    இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரிவிளை சந்திப்பில், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்றனர்.

    நடைக்காவு சந்திப்பில் அவர்கள் காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது, 50 கிலோ எடை உள்ள 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனை காருடன் போலீசார் கைப்பற்றினர்.

    • 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கினர்
    • காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சோதனையில் கடத்தல் தடுக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் மீட்கப்படுவதோடு கடத்தல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    நேற்று விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஆற்றூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தே கத்துக்கு இடமாக சொகுசு கார் வந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மாறப்பாடி பகுதியில் காரை மடக்கியது.

    அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அதி காரிகள் காரை சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    தொடர்ந்து காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்த லுக்கு பயன்படுத்திய கார் வட்டாட்சியர் அலுவலக த்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    உடுமலை:

    உடுமலை ெரயில்வே சாலை சந்திப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது தொடா்பாக உடுமலை ஜானிபேகம் காலனியில் வசித்து வரும் முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இவா் உடுமலை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    • சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
    • காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அவ்வப்போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ரோந்துப் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவீர ரோந்து சென்றனர்.

    அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? அவர் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    • ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 49), அண்ணா நகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோரை கைது செய்தனர்.

    விசாரணையில் நாமக்கல், நல்லிபாளையம், ராமாவரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

    • தக்கலை தபால் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த போது நூதன முறையில் வாழைக் குலைகளுக்கு அடியில் மறைத்து வைத்து சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்த மினி டெம்போ அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் 3 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    தக்கலை, அக்.20-

    தக்கலையில் இன்று அதிகாலையில், சுங்கான்கடையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார், தலைமையிலான அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த சொகுசு கார் நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் அதிவேகமாக சென்றது.

    வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தியபோது ஓட்டுநர் சிறிது தூரத்தில் வாகனத்தினை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் சொகுசு கார் சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. தொடர்ந்து பயணிகள் ஆட்டோவினை அழகிய மண்டபம் அருகே நிறுத்தி சோதனை செய்த போது ஓட்டுநர் தப்பி ஓடினார். பின்னர் அதிலிருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து தக்கலை தபால் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த போது நூதன முறையில் வாழைக் குலைகளுக்கு அடியில் மறைத்து வைத்து சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்த மினி டெம்போ அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் 3 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரியவந்துள்

    ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    • ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
    • லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
    • செந்தில்குமார் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் பகுதி யில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியாக மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை போலீ சார் மறித்து சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சங்கராபுரம் தாலுகா, மோ.வன்னஞ்சூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பதும், 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில் குமாரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்த தில், சுமார் 2 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    குளச்சல், அக். 13-

    குளச்சல் பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார், தலைமையில் அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு தீவிர ரோந்து சென்றனர்.

    பனவிளை பகுதியில் அவர்கள் வாகன சோத னையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்தக் காரை அதிகாரிகள் நிறுத்த முற்பட்டனர்.

    ஆனால் அந்தக் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரி கள் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்று மடக்கி னர். அப்போது காரை ரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்த தில், சுமார் 2 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    • நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல்
    • மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த கார் சிக்கிக்கொண்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணை ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமாருக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தக்கலை பகுதி மற்றும் புலியூர்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழி மறித்தனர். காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். எனினும் அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த சொகுசு கார் சிக்கிக்கொண்டது.

    இதனால் டிரைவர் சொகுசு காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வருவாய் ஆய்வாளர் விஜிமாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் ஆகியோர் குளச்சலில் உள்ள கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற் கொண்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மொடக்குறிச்சி அடுத்த பி.மேட்டுப்பாளையம், பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும் வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவல் பேரில் அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×