search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே கேரள காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
    X

    குளச்சல் அருகே கேரள காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு

    • சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
    • காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அவ்வப்போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ரோந்துப் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவீர ரோந்து சென்றனர்.

    அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? அவர் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×