search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for smuggling"

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற் கொண்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மொடக்குறிச்சி அடுத்த பி.மேட்டுப்பாளையம், பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும் வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவல் பேரில் அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
    • பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு இன்ஸ்பெ க்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையம், கிருஷ்ணம் பாளையம், பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் வாகன சோதனை–யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளை யத்தை சேர்ந்த பன்னீர் (60) சுரேஷ் (36) ஈரோடு நொச்சிகாட்டு வலசை சேர்ந்த தினகரன் (29) நாமக்கல் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ( 23) ஈரோடு கருங்கல்பாளையம் சுரேஷ் (35) அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம அருகே கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த மோகன் குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×