என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்
- போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
- செந்தில்குமார் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் பகுதி யில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியாக மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை போலீ சார் மறித்து சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சங்கராபுரம் தாலுகா, மோ.வன்னஞ்சூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பதும், 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில் குமாரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






