search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி பறிமுதல்"

    • மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர்.
    • பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலூர் ஈ.பி.காலணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் வயது (40). இவர் பொதுமக்களிடம் இருந்து இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி தன் வீட்டில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஈ.பி. காலணி பகுதியில் உள்ள மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வின்போது அவரது வீட்டில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 20 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளும் என மொத்தம் 1080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்து வந்த மகாராஜனை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    • வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்தல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யத்திலிருந்து, காட்பாடி, ஆம் பூர். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல் லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுதுணைபோ லீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக் டர் வனிதா, சப்-இன்ஸ்பெக் டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலை யங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது ஜோலார்பேட் டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டை களில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோரேஷன் அரிசியை பறி முதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.
    • ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.

    தருமபுரி,

    ரேசன் அரிசியை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோரை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணு கோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி பாபா சாகிப் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதியில் சேகர் (47) என்பவரது வீட்டில் இட்லி கடைகளுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டி ருந்த ரேஷன் அரிசியை தலா 50 கிலோ எடைகொண்ட 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.

    • ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    சேலம்:

    சங்ககிரியில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டவழங்கல் அதிகாரி அதிரடி
    • ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    தமிழக-கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழு எருதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். தொடர்ந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 1800 கிலோ சிக்கியது
    • பறக்கும் படை தாசில்தாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில், ரெயில்களிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையி லிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது இருக்கையின் அடியிலும், கழிவறை பகுதியிலும் சிறு சிறு மூட்டைகளாக 1800 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

    45 மூட்டைகளில் இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் பறக்கும் படை தாசில்தார் சிவ பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.

    • ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
    • லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 25 டன் சிக்கியது
    • சர்க்கரை மூட்டையில் வைத்து கடத்தினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஏரிக்கரை கடந்த ஆண்டு பழுதடைந்து பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது.நீர்வள ஆதாரத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக ஏரிக்கரையை சீர் செய்து இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அணங்காநல்லூர் கிராமத்திலிருந்து குடியாத்தம் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று கூட நகரம் ஏரிக்கரை மீது வந்துள்ளது. பழுதடைந்து இருந்த ஏரிக்கரை பகுதியில் லாரி வந்தது.

    சில நாட்களாக பெய்த மழையினால் ஏரிக்கரை சேரும் சகதியாக இருந்தது. அதில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. லாரியை அதிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அவர்களிடம் கிராம மக்கள் வசாரித்தனர்.

    லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பேசினர். கிராம மக்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கவே அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர்.

    இது குறித்து வருவாய்த்துறைக்கும் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி இராமலிங்கம், சுகந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.

    லாரியில் பிளாஸ்டிக் பைகளால் ஆன மூட்டைகள் இருந்துள்ளது சந்தேகம் கொண்டு அந்த மூட்டைகளை மேலிருந்து பார்க்கும்போது சர்க்கரை மூட்டை காண பிளாஸ்டிக் பை இருந்தது. உள்ளே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக இரண்டு மாற்று லாரிகள் கொண்டுவரப்பட்டு தொழிலாளர்கள் மூலம் சுமார் 25 டன் இருந்து 480 அரிசி மூட்டைகளை மற்ற லாரிகளுக்கு மாற்றினார்கள்.பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    ×