என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நித்திரவிளை அருகே காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    கோப்பு படம் 

    நித்திரவிளை அருகே காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
    • இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அஞ்சு கிராமம் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், தேங்காப்பட்ட ணம் பகுதியில் சந்தேகத்தி ற்கிடமாக கார் வந்தது. அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டி னர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றது.

    இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரிவிளை சந்திப்பில், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்றனர்.

    நடைக்காவு சந்திப்பில் அவர்கள் காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது, 50 கிலோ எடை உள்ள 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனை காருடன் போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×