search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்பர்"

    • ரப்பர் வணிகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது.
    • விவசாயிகள் தயாரிக்கும் ரப்பர் ஷீட்டின் விலை கிலோவிற்கு ரூ. 120 ஆக உள்ளது.

    நாகர்கோவில், செப்.6-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குமரி மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரதான வேளாண்மை சார்ந்த தொழிலாக ரப்பர் தோட்டத் தொழில் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்ேடரில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் அரசு ரப்பர் கழகமும் அடங்கும். ரப்பர் தோட்டத் தொழிலை நம்பி பால்வ டிப்பு, ரப்பர் ஆலைத் தொழில், ரப்பர் நாற்றுப் பண்ணைகள் தொழில், ரப்பர் வணிகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது.

    இந்நிலையில் ரப்பர் மரங்களிலிருந்து வடித்து எடுக்கப்படும் ரப்பரின் (ரப்பர் பால், ரப்பர் ஷீட்) விலை கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ உலர் ரப்பர் ஷீட்டின் அதிகபட்ச விலை கிலோவிற்கு ரூ.146 ஆக உள்ளது.

    அதே வேளையில் சிறு ரப்பர் தோட்ட விவசாயிகள் தயாரிக்கும் ரப்பர் ஷீட்டின் விலை கிலோவிற்கு ரூ. 120 ஆக உள்ளது. (கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 250 வரை இருந்தது). ரப்பரின் விலை வீழ்ச்சியானது ரப்பர் தோட்டத் தொழிலை நம்பியிருக்கும் விவசாயி களையும், அதனைச் சார்ந்த உப தொழில்கள் செய்யும் மக்களையும் கடுமையாகப் பாதிக்க வைத்துள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரப்பரின் விலை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை களை முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். கேரள அரசைப் போல, தமிழக அரசும் ரப்பருக்கு தாங்கு விலை அளிக்கும் திட்டங் களை செயல்படுத்து வதுடன், ரப்பர் விவசாயி களுக்கான நலத்திட்டங்க ளையும் உருவாக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் கார ணமாக, இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சிறு ரப்பர் தோட்ட விவசாயி களின் விளை நிலங்கள், குறிப்பாக ரப்பர் தோட்டங்கள் இச்சட்டத்தின் கீழ் தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட் டுள்ளன.

    இதனால் நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள ரப்பர் மரங்கள் முதிர்ந்தவு டன் அவற்றை வெட்டி அகற்றி விட்டு மறு நடவு செய்ய முடியவில்லை. மேலும் விவசாயிகள் ரப்பர் தோட்டங்களை எளிதில் விற்பனை செய்ய முடி யவில்லை. எனவே தனியார் காடுகள் சட்டத்திலிருந்து விவசாயிகளின் ரப்பர் தோட்டங்கள் உள்பட விவசாய விளை நிலங்களை விடுவிக்க வேண்டும்.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், திற்பரப்பு, கடையாலுமூடு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிப் பகுதிகளில் விவசாயிகளின் விளை நிலங்கள் மலையிடக் குழும நிலங்களாக வரையறை செய்யப் பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில், மலையிடக் குழும நிலங்களாக அறி விக்கப்பட்டுள்ள நிலங்களை அதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • 4 முறை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது 6 முறை நடைபெற்று வருகிறது.
    • ரூ.6 கோடி மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது

    நாகர்கோவில், மே.2-

    குமரி மாவட்டம் அருவிக் கரை ஊராட்சிக்குட்பட்ட தச்சூர் தெங்காம்பாறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    பொதுமக்களின் பல் வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொதுமக்க ளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் அறிந்து கொண்டு, அவற்றினை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அரசாக திகழ்ந்து வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் சிறப்பு கிராம சபை கூட்டமானது, 4 முறை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது 6 முறை நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தின் வாயிலாக, கிராமப்புற மக்கள் தங்கள் தேவைகள் குறித்து, கோரிக்கை வைப்பதன் மூலமாக அவர்களுடைய கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாக அமைகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் 100 சதவீதம் குடிநீர், பேருந்து வசதி, சாலை வசதி, புதிய கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இதுபோன்ற சிறப்பு கிராமசபை கூட்டம் வாயிலாக நிவர்த்தி செய்யப்படுகிறது

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தி, செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு அனுமதி வழங்கியதன் அடிப்படை யில், விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் திற்பரப்பு, முட்டம் உள்ளிட்ட 4 பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாடு பணிகள் மேந் கொள்ளப்பட வுள்ளது.

    மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரை வில் தொடங்கப்பட உள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், அருவிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சலேட் கிளிட்டஸ் மேரி, 5-வது வார்டு உறுப்பினர் ஜாண் கிறிஸ்டோபர் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வணிகம் செய்து வருவதுடன், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

    இவரது ரப்பர் கடை மற்றும் குடோன் பிணந்தோடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரு காரில் வந்து ரமேசின் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 பண்டல் ரப்பர் ஷீட்டுக்களை திருடியுள்ளனர். இதனை ரமேஷ் செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக நாகர்கோவிலில் இருந்தவாறு கவனித்தார்.

    இதையடுத்து அவர் உடனடியாக குடோன் அருகில் உள்ள தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் விரைந்து வந்து குடோனுக்கு சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டையும் ஓட்டி வந்த காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருவட்டார் அருகே தெங்குவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (61). இவருக்கு சொந்தமாக ரப்பர் மரங்கள் உள்ளது. இவர் வீட்டின் பின்பக்கம் அதனை உலற வைத்திருந்தார். ரப்பர் ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1500 ஆகும்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் ராஜப்பன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி புலியிறங்கி பகுதியை சேர்ந்த பாலஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் தமிழர் தொழிற்சங்கம் கோரிக்கை
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நாம் தமிழர் ஒருங்கிணைந்த தொழிற்சங்க தலைவர் ஆல்பன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நிர்வாகிகள் மரிய ஜேம்ஸ், அனீஸ் ஆகியோர் இன்று நாகர்கோவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் 1,500 நிரந்தர பணியாளர்களும், 900 தற்காலிக பணியாள ர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். இந்த தொழிலாளர்கள் ரப்பர் தோட்ட பகுதியில் அரசு அனுமதித்த குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஆனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே தொழிலா ளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு ரூ. 40-ஐ உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரப்பர் மரம் வெட்ட கொடுக்கப்பட்ட ஒப்பந்த த்தில் ஊழல் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.

    பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது.
    • தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் தினமும் அதிக மழை பெய்து வருகிறது.

    குமரி மாவட்ட மக்களின் முக்கியமான தொழில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் உயர்தரமான வகையை சார்ந்ததாகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் இங்கு உள்ள ரப்பருக்கு விலை அதிகமாக இருக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் நல்ல வருமானம் வருகிறது.

    தற்போது இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். எனவே அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரப்பர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும்
    • அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் அதிக அளவு ரப்பர் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு உள்ள ரப்பர்தான் உயர்தர வகையை சார்ந்தது. ரப்பர் விவசாயிகள் நலனை பாதுகாக்க கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும், அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குலசேகரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

    தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் வாங்க கேட்டும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை கைவிட வேண்டும். பால் வடிப்பு தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் ரூ.5ஆயிரம், ஒரு மாத கால ரேஷன் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர் தொடக்க உரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி வின்சென்ட், களியல் பேரூராட்சி தலைவர் ஜூலிட், திற்பரப்பு பேரூராட்சி துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர்கள் வில்சன், விஸ்வம்பரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×