search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருவிக்கு"

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×