search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    ருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர்.
    • தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் ராதா எஸ். சுதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ஆனால் தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

    மேலும் கடவுளை காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டு அதன் மூலம் லாபத்தை ஈட்டிட இந்து கோவில் ஒன்றும் லாப நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் அல்ல என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு சிறப்பு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தொடர் மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவு.
    • மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், இன்று புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரூ- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 6.10 மணிக்கு சென்னை- பெங்களூரு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மழை தொடர்ந்து நீடித்து, பயணிகள் குறைவாக இருந்தால், மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    • மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இன்று காலையில்"திடீர்" என்று மழைபெய்தது. இன்னொரு புறம் கடல் சீற்ற மாகவும் கொந்தளிப்பா கவும் காணப்பட்டது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்துதொடங்கப் படவில்லை.இதனால் படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    காலை 9 மணிக்கு மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.அதன் பிறகுசுற்றுலா பயணிகள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
    • ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.

    கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும்.
    • இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக சில ரெயில்கள் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போர்ட்) அதிவிரைவு ரெயிலானது (வண்டி எண்.12653) நாளை முதல் 3-ம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

    சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர்- மன்னார்குடி மன்னை விரைவு ரெயிலானது (வண்டி எண்.16179) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

    சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூர் விரைவு ரெயிலானது (16159) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும்.

    காரைக்குடி - சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது (12605, 12606) இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்குப் புறப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
    • அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    அவிநாசி: 

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் கோரிக்கை மனு அளித்தனா்.

    அதில், கூறியிருப்பதாவது:- 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் அறிவிப்பு

    அருவங்காடு,

    தென்காசி மாவட்டம் மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஊட்டியில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மரப்பாலம் அருகே வந்த போது 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 9 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக குன்னூர் போலீசார் பஸ் டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால் மற்றும் பஸ் உரிமையாளர் சுப்ரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே சிகிச்சையில் இருந்து வந்த ஓட்டுநர் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் பஸ் ஓட்டி சென்றதற்காக முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி இருப்பதால் விவசாயிகள் வேதனை
    • மத்தியஅரசு அறிவித்த தகுதியான நபர்களுக்கு மட்டும் விலக்கு என அதிகாரிகள் அறிவிப்பு

    சூலூர்,

    சூலூர் அருகே அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. இங்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாய பணிகளுக்காக கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டண விலக்கு நிறுத்தப்பட்டது.

    எனவே சுங்கச்சாவடி வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அந்த பகு தியில் வசிப்பவர்கள் கூறுகையில், சூலூர் அருகே அவினாசி சாலை கணியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தினர் சுங்கச்சாவடி அமைத்து அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

    இதற்கு எதிராக நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் நடத்தினோம். அப்போது 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொது மக்களுக்கு கட்டண விலக்கு தருவதாக சுங்கசாவடி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் அவர்கள் திடீரென அவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் கேட்டு வருகின்றனர். இதனால் நாங்கள் அந்த பகுதியை கடக்க ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், மத்தியஅரசு அறிவித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்றவர்கள் இவ்வழியை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.

    • தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் வலியுறுத்தினார்.

    மதுரை

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக் யில் தாங்கள் ஆட் சிக்கு வந்தால் தமிழக மாண வர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்வ தாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது பற்றி எவ்விதமான முயற்சி யையும் தமிழக அரசு எடுக்க வில்லை.

    ஒரு லட்சம் ரூபாய் கல் விக்காக கடன் வாங்கியிருந் தால் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை கட்ட வேண்டும் என்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகிறது. கட்டத்தவறினால் நீதிமன்ற சம்மனும் வருகிறது. சில வங்கிகள் கடனை வசூலிக்க ஏஜென்சிகளை பயன்படுத் துகின்றன.

    தனியார் ஏஜென்சிகள் வட்டிக்காரர்களை போன்று கடன் பெற்ற மாணவர்களை மிரட்டுகிறார்கள். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி எவ்வித கவலையும்படாமல் அதிகாரத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.

    அரசின் விளம்பரங்க ளுக்கு ஆகும் செலவை நிறுத்தினாலே மாணவர்க ளின் கல்விக்கடனை ரத்து செய்துவிடலாம். எனவே திராவிட முன்னேற்றக்கழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் சொல்லியபடி உட னடியாக கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கடைக்காரர்களை போல் மாணவர்களை மிரட்டும் வங்கி ஏஜென்சி யிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

    • அரக்ேகாணம், சோளிங்கர் இடையே தண்டவாள புனரமைப்புப் பணி நடப்பதால் தென்னக ரெயில்வே நடவடிக்கை
    • காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவைக்கு புறப்பட்டு வரும்

    கோவை,

    கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், 4 நாட்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரக்ேகாணம், சோளிங்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாள புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற 13,20,27 மற்றும் அக்டோபர் 4-ந் தேதிகளில் கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் எண் (12680) காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.12679) சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவை புறப்பட்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு செய்திக்குறிப்பில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (எண்.06048) வருகிற 10-ம் தேதி மாலை 5 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் ரெயில்நிலையம் சென்றடையும். 

    • ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
    • பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.

    வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.

    வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.

    பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×