search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்
    X

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ஜலால் முகம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சி தலைவர் கே.எம்.சரீப் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அருகில் மாமநில துணைப் பொதுச்செயலாளர் சண்முகராஜா, மதுரை மண்டல செயலாளர் தமிழ் ஜெய்லானி, பழனிபாபா பேரவை மாநில துணைச் செயலாளர் யூசூப் சையது, மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, இளைஞரணி செயலாளர் மோகன்குமார், துணைச் செயலாளர் ரபீக் ராஜா மற்றும் பலர் உள்ளனர்.

    தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்

    • தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் வலியுறுத்தினார்.

    மதுரை

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக் யில் தாங்கள் ஆட் சிக்கு வந்தால் தமிழக மாண வர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்வ தாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது பற்றி எவ்விதமான முயற்சி யையும் தமிழக அரசு எடுக்க வில்லை.

    ஒரு லட்சம் ரூபாய் கல் விக்காக கடன் வாங்கியிருந் தால் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை கட்ட வேண்டும் என்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகிறது. கட்டத்தவறினால் நீதிமன்ற சம்மனும் வருகிறது. சில வங்கிகள் கடனை வசூலிக்க ஏஜென்சிகளை பயன்படுத் துகின்றன.

    தனியார் ஏஜென்சிகள் வட்டிக்காரர்களை போன்று கடன் பெற்ற மாணவர்களை மிரட்டுகிறார்கள். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி எவ்வித கவலையும்படாமல் அதிகாரத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.

    அரசின் விளம்பரங்க ளுக்கு ஆகும் செலவை நிறுத்தினாலே மாணவர்க ளின் கல்விக்கடனை ரத்து செய்துவிடலாம். எனவே திராவிட முன்னேற்றக்கழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் சொல்லியபடி உட னடியாக கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கடைக்காரர்களை போல் மாணவர்களை மிரட்டும் வங்கி ஏஜென்சி யிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

    Next Story
    ×