search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததான முகாம்"

    • வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் , அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ் தலைமை தாங்கினார். முகாமை தாராபுரம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அரசு வக்கீல் உதயச்சந்திரன், தாராபுரம் அரசு கூடுதல் வக்கீல் இந்துமதி, வக்கீல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு 48 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். முகாமில் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் கல்லூரி முதல்வர்துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. கொ.கீரனூர் அரசு வட்டார மருத்துவமனை மருத்துவர் காசிமுருக பிரபு முன்னிலை வகித்தார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மின்னணு மற்றும் மின்னணுவியல் உதவி பேராசிரியர் சாம் ஸ்டான்லி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹெரால்டு ஜாக்சன், ஆறுமுகம், வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் ஜோதிபாசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் காந்திமதி செய்திருந்தார்.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி பிரபா,

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளைத் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குமரவேல்,

    சத்யநாராயணன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பொதுமக்கள் பல்வேறு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர்.

    இந்த ரத்ததான முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்.

    • ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இதை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்த நிகழ்வில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ- மாணவிகள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றார்.

    இதில் ஊர்த்தலைவர் உதயசூரியன், பள்ளி தாளாளர்கள் ரவிசந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமை ஆசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க. கிளை செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பாக ரத்ததான முகாம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் அன்பு ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தனபாலன், ஒன்றிய தலைவர் வீரகுமார் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் பாலாஜி, மாவட்ட செயலாளர் தன்ராஜ், கண்ணன், சின்னமணி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    • முகாமில் 45-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
    • முகாமினை, அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தொடக்கி வைத்தார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமினை, அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தொடக்கி வைத்தார்.

    இந்த முகாமில் 45-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    இதில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சக்திகுமார், பேராசிரியர்கள் கோபிநாத், குமரன், அரசு மருத்துவர் அருண்பிரசாத், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கெய்க்வாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • இந்நிகழ்விற்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார்.
    • ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கீழவாசலில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு பரிசு த்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் ராதிகாமைக்கேல் சிறப்புரை யாற்றினார்.

    இந்த ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் ஹேனாஜெர்லின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற கவுரவ தலைவர் பரந்தாமன், செயலாளர் சோலையப்பன், பொருளாளர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் பாண்டித்துரை, பழனிச்சாமி, துணை தலைவர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.

    • ரத்ததான முகாம் நடைபெற்றது
    • 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் கவுள்பாளையம் நகர் புற வாழ்விடவாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ராஜேஷ், கவுல்பாளையம் ஒற்றுமையே பலம் நலசங்க தலைவர் உத்திரகுமார், செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் முகாமினை தொடங்கிவைத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா தலைமையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தொகை, சங்கத்திற்கு ஸ்பீக்கர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ரத்தம் கொடையாளர்கள மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 200 பேருக்கும், சாலையோர பாதசாரிகள் 50 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதில் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன், லயன் தைரியம், லயன்ஸ்கிளப் செயலாளர் தமிழ்மாறன், இணை பொருளாளர் செல்வராஜ், செந்தில், உதிரம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அஞ்செட்டி சாலையில் உள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி மகாலில் கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமை தேன்க னிக்கோட்டைபேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முகாமில் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சிறார் நல மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், அன்புச்செல்வன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

    பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக், நவீன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம்.
    • ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவ ட்டம், நன்னிலம்வள்ள லார் குருகுலம் குருதி கொடையாளர் சங்க த்தின் செயற்குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா காந்தி வரவேற்றுப் பேசினார்.

    இக்கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம் நடத்துவது, ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவது, குருதிக் கொடை யாளர்கள் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளி யிடுவது, அதிக குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்கள் கவுரவி ப்பது, மேலும் அன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் பொருளாளர் நந்தன் நன்றி கூறினார்.

    • பெரியகுளத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது
    • ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழை வழங்கப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது.

    முகாமில் நேரு யுவகேந்திரா செந்தில்குமார் தலைமை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்து ரத்த தானம் செய்தவர்க ளுக்கு சான்றிதழை வழங்கினார்.

    இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா தன்னார்வ லர்கள் கோகுல் கிருஷ்ணன், பாலசுப்பி ரமணியன், நாகராஜ், விக்னேஸ்வரன், கனகவேல் மற்றும் ரத்த வங்கி மருத்துவ செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×