என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்கள்.
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் மாபெரும் ரத்ததான முகாம்
- கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அஞ்செட்டி சாலையில் உள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி மகாலில் கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமை தேன்க னிக்கோட்டைபேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாமில் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சிறார் நல மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், அன்புச்செல்வன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக், நவீன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.






